நடிகை ராகுல் பிரித் சிங் தன்னுடைய அடுத்த திரைப்படத்திற்காக பாக்சிங் கற்றுக் கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரகுல் பிரீத் சிங் இவர் தமிழ் சினிமாவில் 2011 ஆம் ஆண்டு இவன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனை தொடர்ந்து 2012ம் ஆண்டு தடையற தாக்க என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் தமிழில் புதுயுகம், என்னமோ ஏதோ ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார் ஆனால் இவருக்கு தமிழில் பெரிதாக மார்க்கெட் கிடைக்கவில்லை இந்தநிலையில் தெலுங்கு பக்கம் தனது முழு கவனத்தையும் செலுத்தினார் அதனால் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் பின்பு மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுபதற்காக ஸ்பைடர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதன்பிறகு கார்த்தி நடிப்பில் வெளியாகிய தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது அடுத்ததாக சூர்யாவின் என் ஜி கே திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு தான் இவருக்கு தமிழில் படவாய்ப்புகள் அமைய தொடங்கியது தற்போது அயலான், இந்தியன் 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய புது திரைப்படத்திற்காக ரகுல் ப்ரீத் சிங் பாக்ஸிங் கற்றுக்கொண்டு வருகிறார் அப்பொழுது ஜிம் டிரைனரை அடித்து துவைக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ.