இந்த ஒரே காரணத்தினால் முட்டி போட்டு நடித்த நடிகர் ரகுவரன்..! பல வருடங்கள் கழித்து வெளியான சீக்ரெட்..!

raguvaran
raguvaran

தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி அதன் பிறகு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது மட்டுமின்றி துணை கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் ரகுவரன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ்மொழி மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அந்த வகையில் தன்னுடைய திரைப்பயணத்தில் 300க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்த நடிகர் ரகுவரன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தன் மூலமாக தான் பல்வேறு ரசிகர் பெரு மக்களை கவர்ந்துள்ளார். பொதுவாக வில்லனாக நடிப்பதற்கு  உடல் பருமன் மற்றும்முகத் தோற்றம் முக்கியம்.

ஆனால் ரகுவரனுக்கு மெல்லிய உடல் இருந்தாலும் அவருடைய குரலின் மூலமாக பல்வேறு முன்னணி நடிகர்களையும் திரைப்படங்களில் மிரட்டி உள்ளார். இந்நிலையில் திரை உலகில்  நடிகர் ரகுவரன் செய்த செயல் பற்றி இணையத்தில் வெளியாகி உள்ளது.

அதாவது மணிரத்தினம் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் அஞ்சலி இந்த திரைப்படத்தில் ரகுவரன் ரேவதி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் மேலும் இந்த திரைப்படத்தில் பல குழந்தை நட்சத்திரங்கள் நடித்த அஞ்சலி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த திரைப்படத்தில் நடிகர் ரகுவரன் மன வளர்ச்சியில்லாத குழந்தைக்கு அப்பாவாக நடித்திருப்பார்.  இவ்வாறு இந்த திரைப்படத்தில் மன வளர்ச்சி இல்லாத குழந்தையை வளர்ப்பது எவ்வளவு கடினம் என்பதை மக்களுக்கு மிக தெளிவாக எடுத்துக் காட்டி இருப்பார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தை பற்றி பல வருடங்கள் கழித்து நடிகை ரேவதி ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது ரகுவரன் உண்மையில் மிகவும் உயரமானவர் அந்த வகையில் இந்த திரைப்படத்தில் நடிக்கும் பொழுது ஒரு காட்சியில் ஒரே பிரேமில் நடிக்க வேண்டும் என்பதால் முட்டிபோட்டுக்கொண்டு ரகுவரன் நடித்தாராம்.

இவ்வாறு வெளிவந்த செய்தியானது சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது அது மட்டும் இல்லாமல் இந்த பெருமைக்கு உரியவர் தன்னுடைய 50 வயதிலேயே இயற்கை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.