கமலின் பிளாக்பஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட ரகுவரன் – இதுவரை யாரும் அறிந்திடாத செய்தி.!

சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்கள் ஒரே படத்தில் நடித்தால் அது ரசிகர்களை மகிழ்விக்கும் மேலும் அந்த படம் பெரிய அளவில் பேசப்படும் ஆனால் ஒரு சில சிறந்த நடிகர்கள்  ஒன்றாக இணைந்து நடிக்காமலேயே இருந்துள்ளனர். அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன்..

பல்வேறு படங்களில் பல கெட்டப்புகளை போட்டு தனது திறமையை வெளிப்படுத்தி வெற்றியை பெற்று இருந்தாலும்.. நடிகர் ரகுவரனுடன் ஒரு படம் கூட நடிக்காமல் இருந்தது பலருக்கும் வருத்தத்தை கொடுத்துள்ளது ஏனென்றால் கமலை போலவே ரகுவரனும் மிகச்சிறந்த ஒரு நடிகர் அதை பல படங்களில் நிரூபித்திருக்கிறார். இவர்கள் இணையாமல் போனதற்கு பல காரணங்களும் வெளிவந்தன..

ஆனால் அது முற்றிலுமே பொய்யான தகவல் தான் உண்மையில் கமலும் ரகுவரனும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்க வேண்டிய சூழல் எல்லாம் ஏற்பட்டதாம் ஆனால் அது நடைபெறாமல் போனது அது குறித்து  தான் நாம் பார்க்க இருக்கிறோம்.. பிரபல முன்னணி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் நாயகன்.

இந்த திரைப்படத்தில் கமலுடன் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ரகுவரனை முயற்சி செய்திருந்தனர் ஆனால் அந்த சமயத்தில் ரகுவரன் வேறு ஒரு படத்திற்காக நீளமான முடியை வளர்த்து விட்டதால் நாயகன் திரைப்படத்தில் ரகுவரன் நடிக்க வில்லையாம் அவர் அந்த படத்தில் நடிக்க இருந்த கதாபாத்திரம் தான் நாசர் நடித்த போலீஸ் கதாபாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை  ரகுவரனின் மனைவி நடிகையுமான ரோகிணி தெரிவித்தார்.

ரகுவரனுக்கும் கமலுடன் நடிக்க வேண்டும் என்பது ஆசையாம் ஆனால் அது அவரது வாழ்க்கையில் நடைபெறாமலேயே போய்விட்டதாம் இதனையும் அவர் தெரிவித்திருந்தார். எது எப்படியோ கமலுடன் ரகுவரன் நடிக்கவில்லை என்றாலும், அவரது ஒரு மனைவி ரோகிணி விருமாண்டி மற்றும் ஒரு சில படங்களில் கமலுடன் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.