ரோஹினியை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே பிரபல நடிகையை காதலித்த ரகுவரன்.?

ragavaran
ragavaran

80 காலகட்டங்களில் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் நடிகர் ரகுவரன் இவர் திரை உலகில் ஹீரோ வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் முக்கிய கதாபாத்திரம் என அனைத்திலும் நடித்து அசத்தியவர். குறிப்பாக சினிமா உலகில் உச்ச நட்சத்திர நடிகர்களுக்கு வில்லனாக நடித்து பேரையும் புகழையும் பெற்றவர்.

இவர் தமிழ் சினிமாவையும் தாண்டி தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து அசத்தியவர். திரை உலகில் பல்வேறு சிறந்த நடிகர்களுடன் நடித்திருந்தாலும் கமலுடன் மட்டும் ரகுவரன் நடித்ததே கிடையாது மேலும் சிறந்த நடிகர்கள் என்றால் சிவாஜி கமல் பலரையும் சொல்லுகிறோம் ஆனால் உண்மையில் சிவாஜிக்கு அடுத்தது.

சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவராக ரகுவரன் இருந்தார் என பல சினிமா வட்டாரங்கள் சொல்லி இருக்கின்றனர். ஆல் ஒல்லியாக இருந்தாலும் தனது குரல் வளத்தின் மூலமாகவே ஹீரோக்களையை நடுங்க விடுவார் ரகுவரன் என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். பல படங்களில் நாமே பார்த்து இருக்கிறோம் சினிமாவில் சிறப்பாக ஓடி கொண்டு இருந்த ரகுவரன் உடல்நலக் குறைவு காரணமாக 2008 ஆம் ஆண்டு இயற்கை எழுதினார்.

இவர் 1996 ஆம் ஆண்டு சினிமா நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார் பிறகு சில வருடங்கள் கழித்து 2004 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர் இவர்கள் இருவருக்கும் ரிஷிவரன் என்ற ஒரு மகன் இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் ரகுவரன் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வெளியாகி வருகிறது.

அதாவது ரகுவரன் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக கூட்டுப் புழுக்கள் என்ற படத்தில் அமலா உடன் இணைந்து நடித்தார் அப்பொழுது அவர் மீது காதல் ஏற்பட்டது அமலா ரகுவரனுக்கு நோ சொல்லி உள்ளார். அதனால் காதல் தோல்வியால் மன அழுத்தத்தில் இருந்தேன் என ரகுவரனே பேட்டி ஒன்றில் சொல்லி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.