தமிழ் சினிமா உலகில் பன்முகத் தன்மை கொண்டவராக விளங்கும் நடிகர்கள் எப்பொழுதும் சினிமா உலகில் கொண்டாடப்படுவார்கள் அந்த வகையில் ராகவா லாரன்ஸ் டான்ஸ் மாஸ்டராக தனது பயணத்தை ஆரம்பித்திருந்தாலும் காலப்போக்கில் தனது திறமையை வளர்த்துக்கொண்டு நடிகராகவும், இயக்குனராகவும் வெற்றி கண்டு அசத்தி வருகிறார்.
இவர் இயக்கிய காஞ்சனா சீரிஸ் தொடர்ந்து வெற்றி அடைந்த நிலையில் தற்போது அதிலிருந்து தனது ரூட்டை மாற்றி பல்வேறு சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து பல்வேறு புதிய படங்களில் நடித்து வருகிறார். இதனால் அவரது சினிமா பயணம் அதிகரித்துள்ளது. இப்பொழுது நடிகர் ராகவா லாரன்ஸ் கையில் ருத்ரன், துர்கா அதிகாரம், சந்திரமுகி 2 ஆகிய படங்கள் கைவசம் இருக்கின்றன.
இதில் குறிப்பாக பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுவது சந்திரமுகி 2 தான் ஏனென்றால் ரஜினியின் சந்திரமுகி படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அதனால் தான் இரண்டாவது பாகத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. சந்திரமுகி இரண்டாவது பாகத்தை பி வாசு இயக்குகிறார் ராகவா லாரன்ஸ் வடிவேலு லட்சுமிமேனன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
இந்த படம் நிச்சயம் திரில்லர் மற்றும் காமெடி கலந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்திற்காக ராகவா லாரன்ஸ் கடுமையாக உழைத்து வருகிறார் என முன்பே கூறப்பட்டது தற்பொழுது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் சந்திரமுகி இரண்டாவது பாகத்திற்காக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது உடல் எடையை ஏற்றி ஆளே மாறி உள்ளார்.
அதன் புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்து அசத்துகின்றன அப்படி என்றால் சந்திரமுகி படத்தில் புதிய ராகவா லாரன்ஸை ரசிகர்கள் பார்க்க இருக்கின்றனர் நிச்சயம் இந்த ராகவா லாரன்ஸை கொண்டாடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதோ நீங்களே பாருங்கள் நடிகர் ராகவா லாரன்சின் நியூ லுக்கை..