வேட்டையன் கேரக்டரில் சஸ்பென்ஸ் இருக்கிறது.. உண்மையை உடைத்த ராகவா லாரன்ஸ்

chandramukhi
chandramukhi

Chandramukhi 2: நடிகர் ராகவா லாரன்ஸ் தற்பொழுது சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. எனவே இது குறித்து சமீபத்தில் ராகவா லாரன்ஸ் சந்திரமுகி படத்தில் புதிய சஸ்பென்ஸ் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரனாவத், மகிமா நம்பியார் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடிப்பில் உருவான சந்திரமுகி இரண்டாவது பாகம் வருகின்ற 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கும் சந்திரமுகி படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மிகவும் மும்பரமாக நடைபெற்று வருகிறது.

அப்படி கோவையில் மால் ஒன்றில் நடைபெற்ற ப்ரோமோஷனில் நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் மகிமா நம்பியார் ஆகியோர் இந்த படம் குறித்து உரையாடினார்கள். மேலும் இந்த மாலில் பொருட்கள் வழங்கும் குலுக்கள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு கார், இரண்டு இரு சக்கர வாகனங்கள், செல்போன்கள் மற்றும் சமையல் உபகரணங்களை ராகவா லாரன்ஸ் பரிசாக வழங்கினார்.

அப்படி ஏராளமான மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மிகவும் கோலாகலமாக கலகலப்பாக சென்ற இந்நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தி வாசிப்பாளர்களிடம் பேசிய ராகவா லாரன்ஸ் சந்திரமுகி முதல் பாகத்தை எப்படி கொண்டாடினீர்களோ அது அனைத்தும் இரண்டாவது பாகத்திலும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வேட்டையன் கதாபாத்திரத்தில் சஸ்பென்ஸ் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து மகிமா நம்பியார், ராகவா லாரன்ஸ் ரசிகர்களுக்கு கைகுலுக்கி அவர்களுடைய கேள்விக்கும் பதிலளித்துள்ளார்கள். இவ்வாறு சந்திரமுகி படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்து வருகின்றனர்.