ஆத்தாடி அந்த கதாபாத்திரமா ஆள விடுங்க சாமி என லோகேஷ் படத்திலிருந்து தெறித்து ஓடிய நடிகர்.! இப்படி வந்த லட்சுமியை வேணான்னு சொல்லிட்டீங்களே.

vikram movie first actor choice

Lokesh kanakaraj : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் லொகேஷன் கனகராஜ் அதாவது மோஸ்ட் வான்டட் இயக்குனர் என்ற அந்தஸ்தில் இருக்கிறார். இவர் விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது விஜய் அவர்களை வைத்து leo என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்கிற்கு வர இருக்கிறது. அதனால் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

அப்படி இருக்கும் நிலையில் லியோ திரைப்படத்தின் ஆடியோ லான்ச் எங்கு வைக்கலாம் என பட குழு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. அதேபோல் லியோ திரைப்படம் ரிலீசுக்கு முன்பே 300 கோடி ப்ரீ பிசினஸ் ஆகியுள்ளது. அதற்கு காரணம் ஏற்கனவே விஜய் நடித்த திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் வேட்டை நடத்தியுள்ளது. அதனால் லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பல மடங்காக அதிகரித்துள்ளது.

இதனால் லியோ திரைப்படன் பிசினஸ் தாறுமாறாக போய்க்கொண்டிருக்கிறது ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்றுள்ளது வசூலிலும் மாபெரும் வசூல் வேட்டை நடத்தி உள்ளது. அதனால் கண்டிப்பாக லோகேஷ் இயக்கும் லியோ திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக லோகேஷ் திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர்கள் மற்றும் நடிகைகள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

லோகேஷ் திரைப்படத்தில் ஏதாவது ஒரு கதாபாத்திரம் கிடைத்தால் போதும் என பல நடிகர்கள் ஏங்கியதுண்டு இந்த நிலையில் லோகேஷ் கூப்பிட்டும் இந்த திரைப்படத்தில் நான் நடித்தால் ரசிகர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என பிரபல நடிகர் ஒருவர் மறுத்துள்ளது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அவர் வேறு யாரும் கிடையாது ராகவா லாரன்ஸ் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் மெகா ஹிட் ஆனா திரைப்படம் விக்ரம் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சூர்யா, பகத் பாசில் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள் இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் வில்லனாக முதன்முதலில் நடிக்க இருந்தது நடன இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் தான். விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் லாரன்ஸ் அவர்களை அணுகி உள்ளார் ஆனால் நடிகர் கமலஹாசன் அவர்களை காரணம் காட்டி இந்த திரைப்படத்தில் விலகிக்கொண்டார்.

இந்த நிலையில் தற்பொழுது ராகவா லாரன்ஸ் பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி இரண்டாவது பாகத்தில் நடித்துள்ளார் ஏற்கனவே 2005 ஆம் ஆண்டு இதன் முதல் பாகத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார் முதல் பாகத்தில் வேட்டையனாக  நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார் அதேபோல் இரண்டாவது பாகத்தில் ராகவா லாரன்ஸ் அவர்கள் நடித்துள்ளார். ராகவா லாரன்ஸ் ரஜினியின் தீவிர ரசிகர் அதனால் தான் கமலின் விக்ரம் திரைப்படத்தில் சந்தான கதாபாத்திரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதற்கு காரணமாக இந்த கதாபாத்திரத்தில் நான் நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என ராகவா லாரன்ஸ் கூறியதாக தகவல் கிடைத்துள்ளது ஆனால் உண்மையான காரணம் ரஜினியின் ரசிகராக இருப்பதால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பமில்லை என கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.