இன்று கோடிகளில் புரண்டாலும் அன்று வெறும் 30 ஆயிரத்துக்கு சொந்த வீட்டை விற்றுவிட்டு அர்த்த ராத்திரியில் நடுரோட்டுக்கு வந்த ராகவா லாரன்ஸ்.! எதற்காக தெரியுமா.?

raghava-lawrence
raghava-lawrence

தமிழ் சினிமாவில் இன்றைய இளைஞர்கள் தங்களுக்கு இருக்கும் திறமையை சமூக வலைத்தளத்தின் மூலம் வெளிப்படுத்தி மிக எளிமையாக நுழைந்து விடுகிறார்கள். ஆனால்  அன்றைய காலகட்டத்தில் சினிமாவில் நடிப்பது என்பது குதிரைக்கொம்பாக இருந்தது. அப்படி மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவில் நுழைந்தவர் தான் ராகவா லாரன்ஸ்.

இவர் தற்பொழுது கோடிகளில் புரண்டாலும் ஒரு காலகட்டத்தில் மிகவும் ஏழ்மையாக இருந்துள்ளார். இன்று பணம் புகழும் கிடைத்தவுடன் பல நடிகர்கள் மிகவும் ஜாலியாக வாழ்ந்து வருவார்கள் ஆனால் ராகவா லாரன்ஸ் அப்படி கிடையாது தான் பட்ட கஷ்டம் வேறு எந்த குழந்தையும் படக்கூடாது என டிரஸ்ட் ஒன்றை நடத்தி அதில் இருக்கும் குழந்தைகளுக்கு வாழ்க்கையில் ஒளியேற்றி வருகிறார்.

அது மட்டும் கிடையாது மகன் மற்றும் மகளால் கைவிடப்பட்ட வயதானவர்களுக்கு முதியோர் காப்பகம் நடத்தி வருகிறார் இப்படி தன்னால் முடிந்த அளவு மக்களுக்கு சேவை செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ். அதனால்தான் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அது மட்டுமில்லாமல் ராகவா லாரன்ஸை குழந்தைகளுக்கு மிகவும் ரொம்பவும் பிடிக்கும்.

இவர் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனராகவும் டான்ஸ் மாஸ்டர் ஆகவும் வளம் வந்து கொண்டிருக்கிறார். என்னதான் இன்று பேரும் புகழும் பணமும் இருந்தாலும் ஒரு காலகட்டத்தில் இவர் மிகவும் கஷ்டப்பட்டதை சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது தனக்கு ப்ரெயின்டியூமர் பிரச்சனை இருந்ததாகவும் அதற்காக தன்னுடைய சொந்த வீட்டை வெறும் 30 ஆயிரத்திற்கு விற்று விட்டதாகவும் கூறி உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் வெறும் ₹30,000-க்கு குடிசை  வீட்டை விற்று விட்டு அதனை திரும்பி திரும்பி பார்த்து தன்னுடைய மாமா வந்ததாகவும். வீட்டை விற்றதால் தன்னுடைய அம்மா கதறி அழுததாகவும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார் 30 ஆயிரத்துக்கு  தேசிய நகரில் இருந்த அந்த குடிசை வீட்டை விற்றுவிட்டு திருவெற்றியூர் பகுதிக்கு வாடகை வீட்டிற்கு வந்ததாக கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ராகவா லாரன்ஸ் மாமா ஊர் தலைவர் இந்த நிலையில் வீட்டை விற்றுவிட்டு பகலில் போனால் எல்லாரும் கேட்பார்கள் என தெரிந்து கொண்டு யாரிடமும் சொல்லாமல் நடுராத்திரியில் வீட்டை விட்டு கிளம்பினார்கள் அப்பொழுது சத்தம் போடாமல் அமைதியாக வாருங்கள் என அவர் மாமா கூறினார் அதற்கு காரணம் யாருக்கும் தெரியக்கூடாது நாம் திடீரென வீட்டை விட்டு கிளம்புவது என கூறினாராம்.

வீட்டை விட்டு கிளம்புவதற்கு முன்பு ராகவா லாரன்ஸ்  அம்மா கண்ணீருடன் வீட்டை திரும்பி திரும்பி பார்த்து வீட்டை தொட்டு கும்பிட்டு கிளம்பினார் எனவும் அவருடைய மாமா வீட்டையே திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே கிளம்பினார் எனவும் ராகவா லாரன்ஸ் கண்ணீருடன் கூறியுள்ளார்… என்னதான் இன்று கோடிகளில் புரண்டாலும் ராகவா லாரன்ஸ் பின்னணியில் இப்படி ஒரு சோக கதை இருப்பது தற்பொழுது தெரியவந்துள்ளது.