Rajinikanth: ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் சந்திரமுகி. மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கி வெற்றி கண்ட இந்த படத்தினை நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகத்தினை பி வாசு இயக்கியுள்ளார். சந்திரமுகி படத்தினை விட இரண்டாவது பாகம் பயங்கரமாக இருப்பதாக கூறி வருகின்றனர்.
மேலும் நடிகர் ராகவா லாரன்ஸ் வேட்டையன் கதாபாத்திரத்தில் புதிய சஸ்பென்ஸ் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் சந்திரமுகி 2 திரைப்படம் வருகின்ற 28ஆம் தேதி அன்று திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது. இதில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
இதற்கு முன்பு சந்திரமுகி 2 செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 480 ஷார்ட்ஸ்கள் காணாமல் போனதால் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர். இவ்வாறு சந்திரமுகி படம் கடந்த 15ஆம் தேதி வெளியாகாததற்கு காரணம் மார்க் ஆண்டனி தான் என கூறப்பட்டு வந்த நிலையில் சமீப பேட்டியில் இயக்குனர் பி வாசு இதற்கு விளக்கம் அளித்தார்.
திடீரென 480 ஷார்ட்ஸ்கள் காணாமல் போனதால் அதனை தேடும் பணியில் தீவிரமாக இருந்துள்ளனர் பிறகு ஐந்து நாட்கள் கழித்து தான் அந்த ஷார்ட்ஸ்கள் கிடைத்ததாக கூறினார். இவ்வாறு படக் குழுவினர்கள் ப்ரோமோஷன் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வரும் நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் வாங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், வணக்கம் நண்பர்களே ரசிகர்களே இன்று நான் எனது தலைவரையும் குருவான ரஜினிகாந்தை சந்தித்தேன் ஜெயிலரின் பிளாக்பஸ்டர் வெற்றிக்காக அவரை வாழ்த்துவதற்காகவும், செப்டம்பர் 28ஆம் தேதி சந்திரமுகி 2 ரிலீஸ் ஆவதால் அதற்கான ஆசிர்வாதங்களையும் பெற்றேன் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் தலைவர் எப்போதும் பெரியவர், குருவே சரணம் என குறிப்பிட்டுள்ளார்.