Raghava lawrence last movie direct salary : தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் ஷங்கர் மற்றும் முருகதாஸ் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்கள் ஆவர், ஆனால் தற்பொழுது இவர்களை விட இரண்டு மடங்கு சம்பளம் வாங்கும் ஒரு இயக்குனர் இருக்கிறார், இவர் சமீபத்தில் இயக்கிய திரைப்படத்திற்காக 50 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக காலடி எடுத்து வைத்து பின்பு இயக்குனராகவும் நடிகராகவும் தனது திறமையை வெளிக்காட்டி பிரபலமடைந்தவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த காஞ்சனா சீரியஸ் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது, குறிப்பாக காஞ்சனா சீரியஸ் திரைப்படங்கள் அனைத்தும் குழந்தைகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
வசூலில் 100 கோடிக்கு மேல் சாதனை படைத்த ராகவா லாரன்ஸ் இயக்கிய திரைப்படங்களில் மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய பலரும் முன் வருகிறார்கள் அந்த வகையில் காஞ்சனா-2 திரைப்படத்தை லட்சுமி பாம் என்ற பெயரில் நடிகர் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்துள்ளார் ராகவா லாரன்ஸ் இந்த படத்தில் நடிகையாக கியாரா அத்வானி நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தை இயக்குவதற்காக தான் ராகவா லாரன்ஸ் 50 கோடியை சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை முன்னணி இயக்குனர்களான சங்கர் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் மட்டுமே 20 கோடியில் இருந்து 50 கோடி வரை சம்பளமாக பெற்று வந்த நிலையில் அவர்களை விட இரண்டு மடங்கு அதிகமாக ராகவா லாரன்ஸ் சம்பளம் வாங்கியது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
இதுதான் ராகவா லாரன்ஸின் அசுர வளர்ச்சி என்று பலரும் கூறி வருகிறார்கள்.