Raghava Lawrence: நடிகர் ராகவா லாரன்ஸ் இடம் சூப்பர் ஸ்டார் ரஜினியா? விஜயா? என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு இவர் கூறியுள்ள பதில் குறித்து பார்க்கலாம். டான்சராக சினிமாவிற்கு அறிமுகமான ராகவா லாரன்ஸ் தற்பொழுது தொடர்ந்து சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து கலக்கி வருகிறார்.
லாரன்ஸிடம் நடன திறமையை பார்த்த ரஜினி அவரை நடன பள்ளியில் சேர்த்து விட்டார் இதனை அடுத்து பல படங்களில் குரூப் டான்சராக நடனத்தில் பின்னி பெடல் எடுத்தார். அப்படி சிரஞ்சீவி நடித்த ஹிட்லர் திரைப்படத்தின் மூலம் நடன அமைப்பாளராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை பெற்றவர்.
இதன் மூலம் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடன அமைப்பாளராக பணியாற்றி கலக்கி வந்தார். ஒரு கட்டத்தில் அமர்க்களம், திருமலை உள்ளிட்ட படங்களின் பாடலில் நடனமாடி கலக்கி இருந்தார். இதனை அடுத்து அற்புதம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர் கடந்த 2004ஆம் ஆண்டு மாஸ் என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார்.
தமிழில் முனி படத்தின் மூலம் இயக்குனராக பிரபலமான இவர் காஞ்சனா, காஞ்சனா 2 போன்ற மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். கடைசியாக காஞ்சனா 3 என்ற படத்தினை இயக்கியிருந்தார். இந்த படம் பெரும் தோல்வியினை அடைந்தது இதனை அடுத்து பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படம் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது. அதன்படி ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது இவ்வாறு இந்த படத்தின் ப்ரோமோஷன்காக பங்கு பெற்று வரும் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து பல தகவல்களை பகிர்ந்து வருகிறார்.
அப்படி சமீபத்தில், விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சிலர் பேசி வருகிறார்கள். ஆனால் அவர் அப்படி எப்பொழுதுமே சொல்லிக் கொண்டதில்லை, சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு அவர் ஆசைப்படவும் மாட்டார், நமக்கு நாமதான் போட்டி என்று தான் விஜய் பல இடங்களில் கூறி இருக்கிறார் என்றர்.
இதனை அடுத்து குட்டி கதை ஒன்றை கூறினார் அதில், மாங்காய் மரத்தில் மாங்காய் தான் காய்க்கும் அதே போல் தென்னை மரத்தில் தேங்காய் தான் காய்க்கும் ஆனால் யாரோ ஒருவர் வியாபாரத்திற்காக தேங்காய் மரத்தில் மாங்காய் காய்க்கும் என்று சொன்னால் நாம் நம்பக்கூடாது. தேங்காய் மரத்தில் தேங்காய் தான் காய்க்கும் என தேங்காய் மரத்துக்கும், மாங்காய் மரத்தில் மாங்காய் தான் காய்க்கும் என மாங்காய் மரத்துக்கும் தெரியும் ஆனால் இரண்டுமே ஒரே மண்ணில் தான் முளைக்கிறது பிரித்து பார்க்க கூடாது என்றார்.