Chandramukhi 2: நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகம் பல வருடங்களுக்குப் பிறகு உருவாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் விமர்சனம் குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா என பல முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில் வெளியாகி பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்த படம் தான் சந்திரமுகி.
இதன் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது சந்திரமுகி படத்தின் 2வது பாகத்தினை பி வாசு இயக்கி இருக்கிறார். அந்த வகையில் ரஜினி கேரக்டரில் இரண்டாவது பாகத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார்.
மேலும் இவர்களைத் தொடர்ந்து வடிவேலு, ராதிகா சரத்குமார் போன்ற முக்கிய நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர். சமீபத்தில் தான் படத்தின் படப்பிடிப்பு முடிந்து எனவே பட குழு குரூப் போட்டோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. இதனை அடுத்து வருகின்ற செப்டம்பர் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
பல கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக லைக்கா நிறுவனம் சந்திரமுகி படத்தினை உருவாக்கி இருக்கும் நிலையில் இதற்கு கீரவாணி இசையமைத்திருக்கிறார். இவர்தான் தனது முதல் விமர்சனத்தை கொடுத்துள்ளார். கீரவாணி சமீபத்தில் சந்திரமுகி படத்தினை பார்த்திருக்கும் நிலையில் அதோடு தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனத்தை பதிவிட்டு இருக்கிறார்
சந்திரமுகி படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் மரண பயத்தில் தூக்கத்தை தொலைத்து உள்ளனர். நான் இந்த படத்தின் அருமையான காட்சிகளுக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்பதற்காக இரண்டு மாதங்களாக இரவு பகலாக தூக்கம் இன்றி தன்னுடைய உழைப்பை போட்டு உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு ரசிகர்களுக்கு இதுவரையிலும் இல்லாத அளவிற்கு தரமான திரில்லர் படத்தை வாசு தந்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.