ragava lawrance large budget inverse that movie tittle : சமூகத்தில் பல்வேறு தொண்டுகளை செய்து ரசிகர் மற்றும் மக்கள் மனதில் பிரபலமாக இருந்து வருபவர் தான் ராகவா லாரன்ஸ். இவர் ஒரு நடன இயக்குனராக திரை உலகில் அறிமுகம் ஆனார்.
இதனைத் தொடர்ந்து தெலுங்கில் பல திரைப்படங்களை இயக்கி இயக்குனராக வலம் வர ஆரம்பித்தார். தெலுங்கில் மட்டும் தனது கைவரிசையை காட்டினால் போதாது என்ற வகையில் தமிழில் ஹீரோவாகவும் இயக்குனராகவும் ஒரே நேரத்தில் பிரதிபலித்தார்.
இவ்வாறு அவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம் தான் முனி. இந்த திரைப்படம் ஒரு பேய் திரைப்படம் ஆகும் இதில் பிரபல நடிகர் ராஜ்கிரண் நடித்திருப்பார். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல ஆக்சன் திரைப்படத்திலும் இவர் நடித்து இருந்தாலும் அந்த திரைப்படம் இவருக்கு சொல்லும்படி வெற்றியை கொடுக்கவில்லை.
இதனால் மறுபடியும் திரை உலகில் பேய் ஓட்ட ஆரம்பித்து விட்டார். அதன் பின் காஞ்சனா திரைப்படத்தை இரண்டு பாகங்கள் இயக்கி மாபெரும் வெற்றியைப் பெற்றார். இதை தொடர்ந்து தற்போது ரஜினி நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார்.
பொதுவாக ராகவா லாரன்ஸ்க்கு ரஜினி என்றால் ரொம்ப பிடிக்கும் ஏனெனில் அந்த அளவிற்கு ரஜினியின் தீவிர ரசிகர் ஆவார். அதுமட்டுமில்லாமல் ரஜினி அரசியலில் இறங்கினால் அவருக்கு ஒத்துழைக்க நான் தயார் எனவும் அவர் கோரியிருந்தார்.
இது ஒரு பக்கமிருக்க சந்திரமுகி திரைப்படத்தின் முதல் பாகத்தை சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த நிலையில் அந்த டைட்டிலை வாங்குவதற்காக மட்டும் ராகவா லாரன்ஸ் சுமார் ஒரு கோடி பணத்தை கொடுத்து வாங்கி உள்ளாராம்.
இவ்வாறு பழைய படத்தின் டைட்டில் கார்ட் ஆனது இவ்வளவு விலை போனது நமது ரஜினியின் இந்த திரைப்படம் தான். பொதுவாக மெகாஹிட் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்தால் அது சொதப்பலாக தான் இருக்கும் இந்நிலையில் ராகவா லாரன்ஸ் எடுக்கப் போகும் இந்த திரைப்படம் எப்படி இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.