தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ராகவா லாரன்ஸ். இவரின் சிறந்த நடிப்பு திறமையினால் இவருக்கு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து வருகிறது மேலும் சினிமாவையும் தாண்டி இவர் பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் ஊனமுடைய குழந்தைகளுக்கு உதவி வருகிறார்.
ராகவா லாரன்ஸ் டான்சராக தான் அறிமுகமானவர் பிறகு திரைப்படப் பாடலில் நடனம் ஆடியிருந்தார். அதன் பிறகு இவருக்கு தொடர்ந்து திரைப்படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் இவர் நடித்த அனைத்து அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட்டான நிலையில் சினிமாவில் தனக்கென ஒரு அந்தஸ்தை பிடித்தார்.
அந்த வகையில் முனி, காஞ்சனா, காஞ்சனா 2 திரைப்படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று தந்தது. இவர் தொடர்ந்து பேய் படங்கள் நடித்து வந்த இவர் தற்பொழுது ஆக்சன் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார். அந்த வகையில் தற்பொழுது ருத்ரன்,சந்திரமுகி 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதுவும் பேய் படம் தான் ஆனால் இவர் நடித்த மற்ற படங்களைப் போல் அல்லாமல் சற்று வித்தியாசமாக இருப்போம் என கூறப்படுகிறது. மேலும் சந்திரமுகி 2 திரைப்படத்தினை லைலா ப்ரொடக்ஷன் தயாரிக்க, எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் முதல் பாகத்தில் ரஜினி, ஜோதிகா, வடிவேலு, பிரபு, நயன்தாரா ஆகியோர்கள் நடித்து மிகப்பெரிய ஹிட்டானது.
இந்நிலையில் பல வருடங்கள் கழித்து மீண்டும் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று வந்த நிலையில் அவ்வப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது. மேலும் நடிகர்கள் வடிவேலு காமெடி செய்த வீடியோக்களும் வெளியாகி இருந்தது.
ரவி மரியா, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலை எண் தற்போது இந்த திரைப்படத்தில் 5 நடிகைகள் என்ற தகவல் வெளியாகிவுள்ளது. அதாவது நடிகை லட்சுமி மேனன் இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.
இவரைத் தொடர்ந்து மகிமா நம்பியார், மஞ்சுமா மோகன், ஸ்ருஷ்டி டாங்கே, சுபிஷா கிருஷ்ணன் உள்ளிட்ட ஐந்து ரொமான்டிக் நடிகைகளும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு பார்த்தால் சந்திரமுகி 2 திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஐந்து இளம் நடிகைகளுடன் நடிக்க இருக்கிறார்.