தமிழ்மொழி மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா இவர் என்னதான் தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவர் ஒரு கன்னட நடிகை என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலாக சினிமாவில் அறிமுகமானார் பின்னர் இவருக்கு கன்னட சினிமாவில் சரியான வாய்ப்பு இல்லாததன் காரணமாக தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததை தொடர்ந்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார்.
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா தற்போது தமிழ் இந்தி கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் நடித்து வருவது மட்டுமில்லாமல் சமீபத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். பொதுவாக நடிகைகள் பலரும் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிடுவது வழக்கம்தான்.
அந்தவகையில் ராஷ்மிக்காவும் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 மில்லியன் பார்வையாளர்களை வைத்திருக்கும் ராஷ்மிகா தெலுங்கில் தற்போது ஆட வல்லு மீக்கு ஜோகர்ளு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் நடிகை ராதிகா குஷ்பு ஊர்வசி ஆகிய அனைவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பொழுது ராதிகா மற்றும் ஊர்வசி செய்யும் சேட்டைகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வகையில் நவராத்திரி சுபராத்திரி கலைமகளும் என்ற பாடலுக்கு ராதிகா மற்றும் ஊர்வசி இணைந்து ராஷ்மிகாவை கொஞ்சிக்கொண்டு பாடுவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளது இந்நிலையில் இவர்கள் செய்யும் சேட்டையை பார்த்து ராஷ்மிகா சிரிக்கும் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.