ராதிகா வேலை செய்யும் இடத்தில் புது பிரச்சனை இனி அங்கேயும் பாக்கியா ராஜ்யம் தான்.! முதலாளி எடுத்த அதிரடி முடிவு..

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஒவ்வொரு சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் பாக்கியலட்சுமி ஜெனி அமிர்தா செல்வி என அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்பொழுது தாத்தா வருகிறார். தாத்தா ரொம்ப நாளா உன்னை பார்க்கவே முடியவில்லை என பாக்கியலட்சுமி பார்த்து  கூறுகிறார் உடனே ஒரு வாரம் தொடர்ந்து எட்டு நாள் சமைத்தோம் அதனால் வீட்டிற்கு வர நேரமே கிடையாது என பாக்கியலட்சுமி கூறுகிறார். உடனே ஜெனி தாத்தா வரும் போதெல்லாம் உங்களை பற்றி தான் கேட்டுக் கொண்டிருந்தார் என கூறுகிறார்.

உடனே செல்வி அப்பொழுது  எவ்வளவு ஜாலியாக சமைத்தோம் பாடல் பாடிக்கொண்டே எனக் கூற தாத்தாவும் ஆமாம் அது எவ்வளவு ஜாலியாக இருந்தோம் அதுமட்டுமில்லாமல் அப்போ இருந்த ஜாலி இப்பொழுது கிடையாது என செல்வி கூறுகிறார். உடனே பாக்கியலட்சுமி தாத்தாவைப் பார்த்து மாமா தோசை சுட்டு தரவா இல்லை டீ காபி போட்டு எடுத்துக் கொண்டு வரவா என கூற உடனே அமிர்தா நான் போய் டீ போட்டுக் கொண்டு வருகிறேன் என கூறுகிறார்.

அமிர்தா காபி போட்டு எடுத்துக் கொண்டு தாத்தா கையில் கொடுக்கிறார், தாத்தா காபி சூப்பராக இருந்தது எனக் கூற அங்கு வந்த ஈஸ்வரி எப்ப வந்தீங்க என்ன கூப்பிட மாட்டீங்களா என தாத்தாவைப் பார்த்து கேட்கிறார். பாட்டி உங்களுக்கும் டீ போட்டு எடுத்துக் கொண்டு வரவா என அமிர்தா கேட்க உன் கையால் டீ குடிக்கும் நிலைமை வந்தால் நான் இந்த வீட்டிலேயே இருக்க மாட்டேன் என கூறுகிறார்.

தாத்தாவை பார்த்து இங்க உக்காந்து அரட்டை அடிச்சிட்டு இருக்கீங்களா வந்த உடனே என்னை கூப்பிட மாட்டீங்களா என்ன கூறி விடுகிறார். அமிர்தாவை  பார்த்து என் முகத்திலேயே நீ இனி முழிக்கவே கூடாது என நிறைய டைம் கூறிவிட்டேன் என கூற உடனே அமிர்தா உள்ளே செல்கிறார் ஜெனியும் உள்ளே செல்ல பின்பு ஈஸ்வரியும் உள்ளே செல்கிறார்.

பின்பு செல்வி இவ்வளவு நேரமா சந்தோஷமா பேசிக்கிட்டு இருந்தோம் ஈஸ்வரி அம்மா வந்தது எல்லாத்தையும் நிறுத்திவிட்டு போயிட்டாங்க என கூறுகிறார் அதற்கு ராமமூர்த்தி தாத்தா அவ இப்படித்தான் இதுக்கு மேல அவளை திருத்தவே முடியாது என கூறி விடுகிறார். அடுத்த காட்சியில் ராதிகா ஆபீஸில் அவருடைய ஹெட் கேண்டின் ஆர்டரை எடுத்தவர்கள் சரியாக சமைக்காததால் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வருகிறது சாப்பிட்டவர்கள் 10 பேர் ஃபுட்பாய்சன் தான் ஆகிவிட்டது என ராதிகாவிடம் கூறிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் ராதிகாவின் ஹெட் பேசாம பாக்கியலட்சுமிக்கு இந்த ஆர்டரை கொடுத்திருக்கலாம் லேடிஸ் சமைத்தால் எந்த ஒரு பிரச்சனையும் வராது அவங்க சாப்பாடு நல்லா இருக்கணும் என்று சொல்ல வேண்டும் என நினைப்பார்கள் எதையும் கலக்க மாட்டார்கள் என கூறிக் கொண்டிருக்க உடனே ராதிகா குறிப்பிட்டு அதெல்லாம் வேணாம் அவங்க மட்டும் எப்படி நல்லா சமைப்பாங்க நம்ம மறுபடியும் டெண்டர் விடலாம் அதில் யார் முக்கியத்துவம் தருகிறார்களோ அவர்களுக்கு கொடுக்கும் என ராதிகா கூறுகிறார்.

உடனே ராதிகாவின் ஹெட்  உன் பேச்சை கேட்டுகிட்டு தான் பாக்கியலட்சுமிக்கு அப்பொழுது ஆடர் கொடுக்கவில்லை. எனக் கூற. ராதிகா அதற்கு  எதற்கும் அவசரப்பட வேண்டாம் சார் மறுபடியும் டெண்டர் விடலாம் நல்லவங்களா பார்த்து ஆர்டர் கொடுக்கலாம் என கூறுகிறார் உடனே ராதிகாவின் ஹெட் உனக்கும் பாக்யாவுக்கும் ஏதாவது பிரச்சனையா? ஏன் அவங்களை வேண்டாம் என கூறுகிறீர்கள் என அதிகாரி கேட்கிறார்.

உடனே ராதிகா அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது சார் எனக் கூறிவிட்டு செல்கிறார் ஆனால் அதிகாரி எதற்காக பாக்கியலட்சுமி வேண்டவே வேண்டாம் என ராதிகா கூறுகிறார் என யோசித்துக் கொண்டிருக்கிறார். ராதிகா வேலை செய்யும் ஆபீசுக்கு மீண்டும் பாக்கியலட்சுமி சமையல் ஆர்டரை பிடிப்பார் என தெரிகிறது அதன்பிறகு ராதிகாவிற்கு பதிலடி கொடுப்பார் எனவும் தெரிய வருகிறது.