தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் ராதிகா இவர் 1980களில் கொடிகட்டி பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமில்லாமல் இவர் பெரும்பாலும் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இதனை தொடர்ந்து அவர் இன்று போய் நாளை வா போக்கிரிராஜா மூன்று முகம், ஊர்க்காவலன், நல்லவனுக்கு நல்லவன், வீரபாண்டியன், கிழக்குசீமையிலே போன்ற வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் மறுக்கமுடியாத நபராக மாறினார் ராதிகா.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமாரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகப் போறார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர் சினிமாவில் தனது பயணத்தை தொடர்ந்தார் அதுமட்டுமில்லாமல் சின்னத்திரை போன்றவற்றில் தனது கால் தடத்தை பதித்து தற்போது வரையிலும் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ராதிகா அவர்கள் தனது கணவருடன் வெளிநாடுகளில் சுற்றி திரிவது வழக்கம் அந்த வகையில் தற்போது அவர் தனது கணவருடன் வெளிநாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.