சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது கதையில் பல திருப்பங்களுடன் விறுவிறுப்புக்கு பஞ்சம் இன்றி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் ஒரு குடும்ப இல்லத்தரசியை மையமாக வைத்து உருவாகி உள்ளதால் அனைத்து குடும்பங்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்துள்ளது.
மேலும் இதில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ராவின் யதார்த்த நடிப்பு மக்கள் பலருக்கும் பிடித்துப்போய் பேவரட் நாயகியாக வலம் வருகிறார். ஆனால் இதில் பாக்யாவின் கணவராக கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் இந்த சீரியலில் மனைவி மற்றும் காதலி என இருவரையும் ஏமாற்றி..
சுற்றித் திரிவது மக்கள் பலருக்கும் வெறுப்பை உண்டாக்கி விட்டது அதனால் அவர் வெளியிடங்களிலும் மக்கள் மத்தியில் நெகட்டிவ் கமெண்டுகளை பெற்று வருகிறார். இந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் கோபி தனது காதலி ராதிகாவை ஏமாற்றி வருவது ராதிகாவிற்கு தெரியவந்துள்ளது.
ஆம் தனது நெருங்கிய தோழி பாக்யாவின் கணவர்தான் கோபி என்ற உண்மையை தெரிந்து அதிர்ச்சி ஆகியுள்ளார் ராதிகா. இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா அடுத்துப் பாக்கியாவை சந்தித்து பேசுவது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆனால் ராதிகா பாக்கியா இடம் தனது காதலர் ஏமாற்றிவிட்டார் என்று மட்டும் சொல்லப்போகிறார் அல்லது உங்களது கணவர்தான் என்னை ஏமாற்றினார் என்று சொல்லுவாரா என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது சீரியலில் ராதிகா மற்றும் பாக்கியா பேசும்போது பெரிய திருப்பம் ஒன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.