ராதிகா எடுத்த புது அவதாரம்… கதறப்போகும் பாக்யா குடும்பம்.!

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்துள்ளது. இந்த நிலையில் இந்த சீரியல் டிஆர்பிஇல் நல்ல ரேட்டிங் பிடித்துள்ளது. அப்படி இருக்கும் நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டில் கோபியை ஈஸ்வரி நீ இங்கேயே இருக்கணும் என கட்டாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அப்பொழுது ஏழில் அவர் எதுக்கு இங்க இருக்கணும் அவர் யாரை பத்தி நினைச்சாரு நம்மள தனியா தானே விட்டுட்டு போனாரு எல்லா பிரச்சனையும் நம்மள தான்  சமாளித்தோம். அப்போ எதைப் பத்தியும் யோசிக்காம தானே போனாரு இப்ப எப்படி இங்க தங்க முடியும் என எழில் கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி நீ வாய மூடு இப்ப எத பத்தியும் பேசாத என அவரை வாயை மூட வைக்கிறார்.

உடனே இனியா அப்பா நம்ம கூடயே இருக்கட்டும் அம்மாவும் நம்ம கூடவே இருக்கட்டும் என கூறிக் கொண்டிருக்கிறார் உடனே அமைதியா இரு உனக்கு ஒன்னும் தெரியாது நீ சின்ன பொண்ணு எனக் கூறுகிறார்.  இந்த நேரத்தில் ஜெனியும் அவர் எப்படி இங்க இருக்க முடியும் எனக் கேட்டுக் கொண்டிருக்க அப்பொழுது எழில் அவர் இங்க இருந்தா எவ்வளவு பெரிய பிரச்சனை வரும் தெரியுமா.? என கூற அதற்கு ஈஸ்வரி என்ன பிரச்சனை வந்தாலும் நாம சமாளிக்கலாம் என கூறுகிறார்.

இப்ப நான் என்ன பண்ணனும் அத்தை அவர் இங்க இருந்தா நான் என்னால இங்க இருக்க முடியாது. நான் வேணா கிளம்பிடவா என கேட்கிறார். முன்னாடி நாம ஒரு வீட்ல தானே இருந்தோம் என ஈஸ்வரி பாட்டி பாக்யாவிடம் கூற அப்பொழுது அவருக்கு எனக்கும் ஒரு உறவு இருந்தது ஆனால் அதுஇப்ப கிடையாது. அப்புறம் எப்படி நான் இங்க இருக்க முடியும் என கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது எழில் பதிலுக்கு பதில் பேசுகிறார்.

இந்த நிலையில் ஈஸ்வரி இந்தக் குடும்பத்துக்கு எவ்வளவு கேர் எடுத்து பார்த்திருப்பான் கோபி உங்களுக்கு அப்பா தானே அவன் மேல கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா உங்களுக்கெல்லாம் என்ன ஆச்சு. இப்படி கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது கோபி திடீரென அது சரிப்பட்டு வராதுமா நான் கிளம்புறேன். எனக் கூறிக் கொண்டிருக்கிறார் உடனே ஈஸ்வரி கோபியிடம் அவள டைவர்ஸ் பண்ணிட்டு வந்துரு நாம எல்லாரும் ஒண்ணா இருக்கலாம் என கூறுகிறார்.

இதற்கு கோபி அதிர்ச்சடைகிறார் அதெல்லாம் சரிப்பட்டு வராது ராதிகாவ விட்டுட்டு  நான் எப்படி வர முடியும், அப்படி வந்த பெரிய பிரச்சனையாகிடும் எனக் கூறிக் கொண்டிருக்கிறார் அந்த பக்கம் ராதிகாவின் அம்மா நீ இங்க இருக்கிறது சரிபட்டு வராது புருஷன் இருக்கிற இடத்தில்தான் இருக்கணும் நீ உன் பொட்டி படிக்க எடுத்துக்கிட்டு கிளம்பு என கூறுகிறார். உடனே ராதிகாவும் பாக்யா வீட்டிற்கு கிளம்புகிறார்.

பாக்கியா வீட்டில் ராதிகா என்ட்ரி கொடுக்கும் பொழுது கோபி மற்றும் பாக்கியா குடும்பம் அதிர்ச்சி அடைகிறார். ராதிகா இனி இந்த வீட்டில் தான் தங்க போகிறார் எனில் பாக்கிய குடும்பத்திற்கு கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.