பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா நடத்தி வந்த ஹோட்டலில் கெட்டுப் போன காரியை சமைத்ததாக கூறி ஹோட்டலுக்கு சீல் வைக்கிறார்கள் அதனால் சமைத்து வைத்த அனைத்து பிரியாணியும் வெளியே எடுத்து வைத்து விட்டு கடையை இழுத்து மூடி சீல் வைத்து விடுகிறார்கள். இதனால் பாக்யா வருத்தத்தில் இருக்கிறார் அதுமட்டுமில்லாமல் எவ்வளவு சொல்லியும் சமாதானப்படுத்த முடியாமல் எழில் மற்றும் செழியன் கஷ்டப்படுகிறார்கள்.
இந்த நிலையில் பாக்கியா அந்தக் கறியை நான் சாப்பிட்டு பார்த்தால் தெரிந்துவிடும் அப்பவாவது நம்புவார்களா என சாப்பிட முயற்சி செய்யும்பொழுது அனைவரும் தடுக்கிறார்கள் உங்களை நாங்கள் நம்புகிறோம் ஆனால் நம்ம நேரம் இது மாதிரி ஆகிவிட்டது என கூறுகிறார்கள். அடுத்த காட்சியில் கோபி நடந்ததை டிவியில் பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் மூன்று நாட்கள் மட்டும் தான் சீல் வைத்துள்ளார்கள். இது என்ன ஒரு தண்டனை ஆய்சுக்கும் மூட வேண்டிதானே என கோபி வேகமாக கத்தும் பொழுது ராதிகா என்னாச்சு எதற்கு கத்துகிறீர்கள் என அருகில் வந்து உட்கார்கிறார்.
அப்பொழுது கோபி ராதிகாவிடம் பாக்யாவின் ரெஸ்டாரண்டை இழுத்து மூடி விட்டார்கள் கெட்டுப்போன கரியை வைத்து சமைத்ததால் இப்படி ஒரு பிரச்சனை எனக் கூறுகிறார் அப்பொழுது ராதிகாவின் அம்மா கைதட்டி சிரிக்கிறார் ஆனால் ராதிகா பாக்கியாவுக்கு சப்போர்ட் பண்ணுவது போல் கண்டிப்பாக பாக்கியா இந்த மாதிரி செஞ்சிருக்க வாய்ப்பே கிடையாது எங்க ஆபீஸ்க்கு சமையல் செய்து அனுப்புவார்கள் அப்பொழுது கூட தரம் குறைந்ததே கிடையாது எனக் கூறுகிறார்கள்.
உடனே கோபியை பார்த்து பாக்கியா ஹோட்டலில் நடந்ததற்கும் உங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என கேட்கிறார் அதற்கு கோபி அங்க என்ன நடந்தா எனக்கென்ன நான் ஏதாவது நடக்கும்னு எதிர்பார்த்தால் அது மாதிரி நடந்துருச்சு கடவுள் இருக்கிறார் என கூறி ஊசி மூழ்கி கிளம்புகிறார். அப்பொழுது ராதிகாவின் அம்மா, ராதிகாவிடம் நீ மாப்பிள்ளைக்கு தான் சப்போர்ட் பண்ணனும் தேவையில்லாம பேசாத என் வாயிலும் என்ன வேணும்னாலும் வரும் என பேச அதற்கு ராதிகா முறைத்து விட்டு செல்கிறார்.
பாக்கியா வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது இனிய மற்றும் பாட்டி ஜெனி என அனைவரும் புலம்பி கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது என்ன ஆச்சு என இனிய கேட்க நடந்த அனைத்தையும் எழில் கூறுகிறார் அதேபோல் பாட்டியும் என்னால்தான் எல்லா பிரச்சனையும் என்ன மன்னிச்சிடு பாக்கியநாள நீங்க என்ன செய்வீங்க அத்தை உங்களால் எங்களுக்கு நல்லது தான் நடந்திருக்கு என ஆறுதல் கூறுவது போல் பாக்கியா பேசுகிறார்.
ஆர்டர் எடுத்த மொத்த பணத்தையும் பொருள் வாங்குவது புகை எவ்வளவு இருக்கு என பார்க்க வேண்டும் என பேசிக்கொள்கிறார்கள் அப்பொழுது இன்னும் ரவி 8 லட்சம் தேவை என தெரியவரா இரண்டு நாட்களுக்குள் எப்படி ரெடி பண்ண முடியும் என முழித்துக் கொண்டிருக்கிறார்கள் இத்துடன் எபிசோட் முடிகிறது.