கோபியின் முழு ராஜ தந்திரத்தையும் கண்டு பிடித்த ராதிகா – சேர்ந்து வாழ கெஞ்சி கூத்தாடும் சம்பவம் – அனல் பறக்கும் பாக்கியலட்சுமி சீரியல்.!

bakkiyalakshmi
bakkiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலெட்சுமி தொடர் தற்போது ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த முக்கிய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பாக்யாவின் கணவர் கோபி தனது குடும்பத்தை நீண்டநாளாக ஏமாற்றி கள்ளக்காதலி ராதிகாவிடம் வீட்டுக்கு தெரியாமல் பழகி வந்த நிலையில் கோபி.

ராதிகாவையும் ஏமாற்றி அவரது குடும்பத்தை பற்றிய உண்மைகளை மறைத்து திருமணம் செய்து கொள்வதாகவும் கூறிவந்தார். இந்த நிலையில் சமீபத்தில் கோபி ராதிகாவிடம் போதையில் அவரது குடும்ப புகைப்படத்தை காண்பித்துள்ளார் இதனால் அதிர்ச்சி அடைந்த ராதிகா பாக்கியா தான்.

உங்கள் மனைவி என்ற உண்மையை என்னிடம் மறைத்து என்னை திருமணம் செய்து கொள்ள பார்த்தீர்களா என கொந்தளித்து என் வீட்டிற்கு வராதீர்கள் உங்களுக்கும் எனக்கும் இனி ஒன்றுமே கிடையாது என கோபியை துரத்தி விட்டு உள்ளார். இப்படி ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கையில் மறுபக்கம் ராதிகாவின் தோழி பாக்கியா.

வீட்டிற்கு வரும்போது அவரிடம் ராதிகா என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என சொன்னவர் சரி இல்லை என்னிடம் பல பொய்களை கூறி உள்ளார் அவரது குடும்பம் பற்றிய உண்மைகளை தற்போது தான் என்னிடம் சொல்லி உள்ளார் என ராதிகா சொன்னதும் பாக்கியா அவரது குடும்பம் பற்றிய உண்மைகளை அவரே வந்து சொல்லும் போது அவர் நல்லவராக தான் இருப்பார்.

என்று சொல்லி கண்டிப்பாக உங்கள் திருமணம் நடக்கும் என வெகுளித்தனமாக பாக்கியா கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் ராதிகா கோபி மேல செம கடுப்பில் உள்ளார் மீண்டும் கோபி ராதிகா வீட்டிற்கு வரும் போதும் வீட்டை விட்டு துரத்தி அனுப்பிவிடுகிறார் இப்படி தற்போது பாக்கியலட்சுமி கதைக்களம் நகர்ந்து வருகிறது.