கோபியின் திருட்டுத்தனத்தை கண்டு பிடித்த ராதிகா.? இந்த வாரம் பாக்கியலட்சுமி தொடர்.!

bakkiyalashmi
bakkiyalashmi

விஜய் டிவியில் டி ஆர் பி யில் டாப் லிஸ்டில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி தொடர். இந்த சீரியல் ஒட்டுமொத்த குடும்பங்களின் வரவேற்ப்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பாக்கியலட்சுமி  கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜித்ரா மக்கள் பலரின் கவனத்தை ஈர்த்து ஃபேவரட் நாயகியாக வலம் வருகிறார்.

ஆனால் இதில் பாக்யாவின் கணவர் கோபி இந்த சீரியலில் அவரது கள்ளக்காதலி ராதிகாவை குடும்பத்திற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்வதற்காக முனைப்பு காட்டி வருகிறார். மேலும் அதற்காகப் பாக்கியாவை ஏமாற்றி கோர்ட்டுக்கு அழைத்து சென்று விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் பாக்யலட்சுமி பாண்டியன் ஸ்டோர் சீரியல் இரண்டும் இணைந்து மெகா ஒளிபரப்பாகிய போது மூர்த்திக்கு கோபி இப்படி செய்யும் செயல் தெரிய வருகையில் ராதிகாவிடம் சென்று கோபி நல்லவர் கிடையாது அவர் குடும்பத்தைப் பற்றி விசாரியுங்கள் என்று சில குற்றச்சாட்டுகளை வைத்து வந்துள்ளார்;.

அதனால் ராதிகா மன குழப்பம் அடைந்து கோபியிடம் உங்களது குடும்பத்தை நான் பார்த்தே ஆகவேண்டும் உங்களது வீட்டிற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள் என பிடிவாதமாக உள்ளார். இந்த நிலையில் தற்போது பாக்கியலட்சுமி தொடரில் ஹை  வோல்டேஜ் எபிசோடு வரப்போகிறது.

அதாவது ராதிகாவிற்கு தனது தோழி பாக்யாவின் கணவர்தான் கோபி என்கின்ற உண்மை அடுத்தடுத்து வரவுள்ள எபிசோடுகளில் தெரியவர உள்ளது. இந்த தகவல் தற்போது விஜய் டிவியின் கீழே விளம்பரமாக காண்பித்து வருகின்றனர். இதனால் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் பலரும் நாம் எதிர்பார்த்தது நடக்க உள்ளது என்ற சந்தோஷத்தில் உள்ளனர்.

bakkiyalakshmi
bakkiyalakshmi