ஒரே ஒரு நடிகருடன் மட்டும் 18 படம் நடித்த ராதிகா.. ரஜினி, விஜயகாந்த் கிடையாது.?

rajini-rathika-vijayakanth
rajini-rathika-vijayakanth

80,90 காலகட்டங்களில் கொடி கட்டி பறந்தவர் நடிகை ராதிகா இவர் கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது அதனைத் தொடர்ந்து இவர் இனிக்கும் இளமை, நிறம் மாறாத பூக்கள், எங்க ஊரு ராசாத்தி, இதயத்தில் ஒரே இடம் என பல்வேறு படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமடைந்தார்.

ஒரு கட்டத்தில் இவர் உச்ச நட்சத்திர நடிகர்களான ரஜினி, விஜயகாந்த், சுதாகர் போன்ற டாப் நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக்கொண்டார் தொடர்ந்து சூப்பராக ஓடினாலும் ஒரு சில நடிகர்களுடன் அதிக படம் பண்ணியதோடு மட்டுமல்லாமல் காதல் கிசுகிசுவிலும் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ரஜினியுடன் சினிமா பயணத்தை ஆரம்பித்த சுதாகர் உடன் நிறைய படம் பண்ணினார் சரியாக சொல்லவேண்டும் என்றால் ராதிகாவும், நடிகர் சுதாகரும் சேர்ந்து சுமார் 18 திரைப்படங்கள் ஒன்றாக நடித்து உள்ளனர் இதனால் அப்பொழுது பெரிய அளவில்  கிசுகிசு கிளம்பியது. மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பல தகவல்கள் வெளிவந்தன.

40 படங்களுக்கு மேல் நடித்த சுதாகர் திடீரென படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். ஒரு சமயத்தில் தமிழை தாண்டி தெலுங்கில் தொடர்ந்து பட வாய்ப்பு கைப்பற்றி அங்கேயும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கான ஒரு இடத்தை பிடித்தவர் இவர் அங்கு மட்டுமே சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1990 இல் ரஜினி நடித்த அதிசய பிறவி திரைப்படத்தில் வில்லனாக நடித்த அசத்தினார். ரஜினியும், சுதாகரும் பயிற்சி பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் ஒன்றாக தான் சினிமா உலகில் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக சுதாகர் தமிழில் காதல் அழிவதில்லை, தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.