400 கோடி பட்ஜெட்டில் பிரபாஸ் நடிக்கும் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இதோ.! கோடிகோடியாக கொட்டினா பிரம்மாண்டமாக தான் இருக்கும்.!

rathosh
rathosh

நடிகர் பிரபாஸ் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர், இவர் தெலுங்கில் 2002 ஆம் ஆண்டு ‘ஈஸ்வர’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு வெளியாகிய வருஷம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார.

அதன் பிறகு தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார், பின்பு பிரபாஸ் 2015ஆம் ஆண்டு பாகுபலி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார் இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியானது.

மேலும் பாகுபலியை தொடர்ந்து பாகுபலி 2 திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார், இந்தநிலையில் பிரபாஸ் திரைப்படம் எப்பொழுது வரும் என எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது ரசிகர்களுடன், இப்படி எதிர்பார்ப்பை எகிற வைத்து பிரபாஸ் நடிப்பில் வெளியான சகோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இருந்தாலும் பிரபாஸ் நடிக்கும் திரைப்படம் வசூலில் கல்லா கட்டினாலும் படத்தின் பட்ஜெட்டும் தாறுமாறாக எகிறிக் கொண்டே போகிறது, இந்த நிலையில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் நடிக்கும் ராதேஷ்யாம் என்ற திரைப்படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 400 கோடி என கூறப்படுகிறது.

இந்தநிலையில் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வைரலாகி வருகிறது, இந்த மோஷன் போஸ்டர் பார்த்தால் காதல் கலந்த திரைக்கதையாக இருக்கும் என தெரிகிறது.