Rachitha Mahalakshmi father dies : சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் தந்தை ராஜ்குமார் உடல் நலக்குறைவால் காலமானார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரிவோம் சந்திப்போம் சீரியலின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை ரச்சிதாவிற்கு இந்த சீரியல் நல்ல ரீச்சியினை கொடுத்தது. அதன் பிறகு 2013ஆம் ஆண்டு ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 2வில் நடிக்க தொடங்கினார்.
இந்த சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்த ரச்சிதா தொடர்ந்து அடுத்தடுத்த சீரியல் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார். சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் தற்போது இருக்கும் அளவிற்கு அழகாக ரச்சிதா இல்லை ஆனால் இவருடைய நடிப்பு ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது. இவ்வாறு பிரபலமடைய தொடங்கிய பிறகு தான் ரச்சிதா அழகாக மாறினார்.
அப்படி கன்னடம், தெலுங்கு போன்ற மற்ற மொழி சீரியல்களிலும் நடித்து வருகிறார். இதனை அடுத்து பிரிவோம் சந்திப்போம் சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் சமதத்துடன் திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவரும் இணைந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான நாச்சியார் என்ற சீரியலில் நடித்திருந்தனர்.
ஆனால் கொரோனா காரணத்தினால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது அதன் பிறகு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதிவரை சென்றார். இதனை அடுத்து மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் தினேஷ் செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புகிறார் என்றும் போன் செய்து மிரட்டுகிறார் எனவும் புகார் அளித்தார்.
எனவே இதனையடுத்து மகளிர் மாங்காடு அனைத்து மகளிர் போலீசார் தினேஷை விசாரணைக்கு அழைத்து விசாரணை செய்வது. தற்பொழுது சட்டப்படி விவாகரத்து செய்து கொள்ளவில்லை என்றாலும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் கணவரை பிரிந்து வாழும் ரச்சிதா தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.
இந்த சமயத்தில் சில மாதங்களாக பெங்களூருவில் தங்கி உடல்நிலை சரியில்லாமல் இருந்த தனது தந்தையை கவனித்து வந்த நிலையில் இவருடைய தந்தை உயிரிழந்துள்ளார். அதற்கான இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்ற முடிந்துள்ளது. இவ்வாறு தந்தையை இழந்து வாடும் ரச்சிதாவிற்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.