Rachitha Mahalakshmi: நடிகை ரச்சித்தா மகாலட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு புதிய சீரியல் ஒன்றில் மிரட்டலான கெட்டப்பில் நடிக்க இருக்கும் நிலையில் அது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக லைக்குகளை குவித்து வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரிவோம் சந்திப்போம் சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் கன்னட சீரியல் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி.
இந்த சீரியலைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியல் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். சரவணன் மீனாட்சி சீரியல் தான் இவருடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இதன் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான இவர் நாம் இருவர் நமக்கு இருவர், நாச்சியார் புரம் போன்ற தொடர்ந்து அடுத்தடுத்த ஹிட் சீரியல்களை கொடுத்து வந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றிருந்தார். ஆனால் இதில் இவருடைய கேரக்டர் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை எனவே இதன் காரணமாக பிரிவோம் சந்திப்போம் சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
கிட்டத்தட்ட 10 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் கலந்துக் கொண்ட ரரச்சித்தா மகலட்சுமி 90 நாட்களுக்கு மேல் தாக்கு பிடித்து கடைசி வாரத்தில் கடுமையான போட்டிக்கு இடையே குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் திரைப்படங்களின் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்பொழுது புதிய சீரியல் ஒன்றில் போலீஸ் அதிகாரியாக என்ட்ரி கொடுக்க உள்ளார். அது குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ய சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.