ராபர்ட்டின் காதல் சேட்டைக்கு முடிவுகட்ட பிக்பாஸ் வீட்டிற்க்குள் நுழைந்த ரச்சிதாவின் கணவர்.! அட இனிதான் இருக்கு சம்பவமே..

bigg-boss-067
bigg-boss-067

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் மற்ற சீசன்களை விட இந்த சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் போட்டியாளர்களும் தொடர்ந்து தன்னுடைய சிறந்த விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார் இதன் காரணத்தினால் சண்டை சச்சரவு அதிகமாக இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் 21 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியில் ஆறு பேர் வெளியாகி தற்பொழுது 15 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் முக்கியமான ஒரு போட்டியாளர் தான் ரட்சிதா இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.

பிறகு தொடர்ந்து ஜீ தமிழ், விஜய் டிவி, கலர்ஸ் தமிழ் என முன்னணி தொலைக்காட்சிகளில் பணியாற்றி வந்த இவர் தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று தனது சிறந்த விளையாட்டு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதாவின் பின்னாடியே ராபர்ட் மாஸ்டர் சுற்றி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

ரட்சிதாவிற்காக அழுவது, அவர் மேல் அக்கறை இருப்பது போல் பேசுவது, கையில் பிடித்து இழுப்பது என பலவற்றையும் வழக்கமாக வைத்திருக்கும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்து வருகிறது. இதன் காரணத்தினால் ராபர்ட்டின் இளம் காதலி அவர் ஆசையாக கொடுத்த மோதிரத்தை தற்பொழுது கொடுத்து அனுப்பியுள்ளார் இதனால் ராபர்ட் புலம்பி வருகிறார்.

அதேபோல் ரட்சிதாவின் கணவர் தினேஷ் ராபர்ட் எல்லை மீறி நடந்து கொள்வதாகவும் அவருக்கு யாரும் ஓட்டு போட வேண்டாம் விளையாடும் திறமை இருப்பவர்களுக்காக அனைவரும் ஓட்டு போடுங்கள் எனவும் தன்னுடைய ட்விட்டர் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் வைல்ட் காடு என்ரியாக ரட்சிதாவின் கணவர் தினேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்ரிக் கொடுக்க உள்ளார்.

தினேஷை பார்த்தவுடன் ரட்சிதா அதிர்ச்சி அடைகிறார் மேலும் ரட்சிதா தினேஷ் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளாமல் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் இந்நிகழ்ச்சியின் மூலம் ஒன்றிணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தினேஷ் ரச்சிதாவுடன் சேர்ந்து வாழவே ஆசைப்படுகிறேன் என்று சமீப பேட்டி ஒன்றிலும் கூறியிருந்தார்.