விஜய் டிவி தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல் மற்றும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன ஆனால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பாப்புலரான நிகழ்ச்சி என்றால் பிக்பாஸ் தான். இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அண்மையில் 6 -வது சீசன் தொடங்கப்பட்டது.
இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அதில் முதலாவதாக காமெடி நடிகர் ஜி பி முத்து மட்டும் தனது சொந்த காரணங்களால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் அவரை தொடர்ந்து விளையாண்ட ஒவ்வொரு போட்டியாளரும் எலிமினேஷன் ரவுண்டில் வெளியேறினர் கடைசியாக பிக்பாஸ் வீட்டை விட்டு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகணடன் வெளியேறினார்.
அதன் பிறகு எந்த போட்டியாளர் வெளியேறுவார் என கணிக்க முடியாமல் இருந்த நிலையில் இந்த வாரம் ரச்சிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். சீரியல் நடிகை ரஞ்சிதாவுக்கு ஏற்கனவே ரசிகர்கள் பட்டாளம் அதிகம் இருந்தது பிக்பாஸ் வீட்டில் அதை சரியாக பயன்படுத்தி தனக்கென ஆதரவை பெருக்கிக் கொண்டார்.
இருப்பினும் இவர் பிக்பாஸ் கொடுக்கின்ற கேம்களை சரியாக விளையாடாததால் அவரை பலரும் விமர்சித்தனர். இதுவே அவருக்கு சறுக்களை கொடுத்தது. ஒரு வழியாக இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் ரச்சிதா பிக்பாஸ் வீட்டில் மொத்தம் 91 நாட்கள் பயணித்துள்ளார்.
அதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தான் நாம் பார்க்க இருக்கிறோம் அவருக்கு ஒரு நாளைக்கு 28,000 என்று வைத்துக் கொண்டால் 2,54,8000 ரூபாய் அவர் சம்பாதித்து உள்ளதாக கூறப்படுகிறது. விஷயத்தை அறிந்த ஒரு சில ரசிகர்கள் வீட்டில் சும்மா இருந்த இவருக்கெல்லாம் இவ்வளவு சம்பளமா எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.