ஜீ தமிழ் சீரியலில் ஜான்சி ராணி ரோலில் நடிப்பதற்காக என்ட்ரி கொடுக்கும் ரச்சிதா.!

RACHITHA
RACHITHA

தமிழ் சின்னத்திரையில் தொடர்ந்து பல ஆண்டு காலங்களாக ஹீரோயினாக நடித்து கலக்கி வருபவர் தான் நடிகை ரட்சிதா இவருக்கு வெள்ளித்திரையில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தாலும் சின்னத்திரையில் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்து வருவதால் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் சமீப பேட்டியில் கூட திரைப்படங்களின் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தாலும் இங்கு சீரியலில் இவர்களிடம் கமிட்டாகி இருப்பதால் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் நடிக்க முடியவில்லை,நான் ஏராளமான படங்களின் வாய்ப்பை தவற விட்டுள்ளேன் இவர் கூறியுள்ளார்.

மேலும் இவர் கலர்ஸ் தமிழ், விஜய் டிவி, ஜீ தமிழ் என அனைத்து தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் சில சீரியல்களில் நடுவராகவும் பணியாற்றி வந்தார் இதன் காரணமாக தற்பொழுது இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

மேலும் தற்பொழுது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் கெஸ்ட் ரோலில் என்ட்ரி கொடுத்துள்ளார். அதாவது இந்த சீரியலில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று முக்கியமான கட்டத்தில் இருந்து வருகிறது எனவே வக்கீல் ஜான்சி ராணி என்கின்ற வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்க ரட்சிதா மகாலட்சுமி கமிட்டாகி உள்ளார்.

இது குறித்த தகவலை ரட்சிதாவே தனது அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மேலும் இவர் நடித்துள்ள சீரியல் எபிசோடுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு சின்னத்திரை தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்தவரும் நிலையில் வெள்ளித்திரையில் நயன்தாரா என்றால் சின்னத்திரையில் ரட்சிதா என கூறும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார்.

இவர் இது சொல்ல மறந்த கதை சீரியலில் ஹீரோயினாக நடித்துவரும் நிலையில் இந்த சீரியல் எனது சொந்தக் கதையை போல் இருக்கிறது எனவும் கூறி இருந்தார் மேலும் இதன் காரணமாக தன் இந்த சீரியலில் நடிப்பதற்காக ஒப்புக்கொண்டேன் என சமீப பேட்டியில் கூறியிருந்தார்.