சென்னையில் கேகே நகரில் அமைந்துள்ளது பத்ம சேஷாத்ரி பாலா பவன் அந்தப் பள்ளியில் பணியாற்றி வந்த முதுநிலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக கிளம்பியுள்ளது. அந்த ஆசிரியர் பெயர் ராஜகோபால் அந்த ஆசிரியர் மாணவிகளிடம் கேட்கக்கூடாத கேள்விகள் கேட்டு தர்ம சங்கடத்துக்கு உள்ளாகி உள்ளார்.
மாணவிகள் உடை அணிந்து உள்ளதை தவறான நோக்கத்துடன் பார்த்து தவறான கேள்விகளை கேட்பது என ஆசிரியரின் அட்டூழியம் அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் ஆன்லைன் வகுப்பு நடக்கும் பொழுது வெறும் துண்டை மட்டும் போட்டுக்கொண்டு பாடம் நடத்தியுள்ளார்.
இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத மாணவிகள் 23-5- 2021 ல் பள்ளி தலைமை டின் அவர்களுக்கு முன்னாள் மாணவிகள் ஒரு பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்கள். அந்தப் புகாரில் அந்த ஆசிரியர் மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்கள் உடனே அதனை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள் இந்த தகவல் சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையாக வெளியாக்கி உடனே அந்த ஆசிரியர் ராஜகோபாலனை கைது செய்தார்கள்.
ராஜகோபாலன் மீது போஸ்கோ சட்டத்த்தின் கீழ் ஐந்து பிரிவின்கீழ் வழக்கு தொடரப்பட்டு அவரை கைது செய்துள்ளார்கள். மேலும் கிடுக்கிப்பிடி விசாரணையில் ராஜகோபாலன் அவர்கள் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டது உண்மைதான் என ஒப்புக்கொண்டார். இந்த விஷயம் வெளியே தெரிந்த உடன் ஆசிரியர் ராஜகோபாலனை ராட்சசன் பட இன்பராஜ் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு வருகிறார்கள் ஏனென்றால் ராட்சசன் திரைப்படத்தில் ஆசிரியராக நடித்த இன்பராஜ் கதாபாத்திரம் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக வடிவமைக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் ராட்சசன் பட இயக்குனர் ராட்சசன் இன்பராஜ் கதாபாத்திரம் சுயமாக உருவாக்கும் செய்யப்படவில்லை பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டது இந்த சம்பவங்களின் குற்றவாளிகள் என்பதை விட மோசமானவராக இருந்தார்கள் எனகூறியுள்ளார். மேலும் நெட்டிசன் ஒருவர் டுவிட்டரில் இன்று ஏதாவது வேலை இருந்தாலும் பி எஸ் எஸ் பி பி பள்ளி சச்சை தான் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ராட்சசன் படம் பார்த்த பொழுது இந்த படத்தை மாணவிகளின் பெற்றோர்கள் பார்த்தால் எவ்வளவு பயப்படுவார்கள் இது தவறான படம் என வாக்குவாதம் செய்தேன் மிக கடுமையான தண்டனை என்பது முதல் தேவை அடுத்து எப்படி என்ன செய்தால் இவற்றைத் தடுக்கலாம் என்பது மிகவும் முக்கியம் என பதிவிட்டுள்ளார்.
ராட்சசன் இன்பராஜ் கதாபாத்திரம் சுயமாக உருவாக்கம் செய்யபடவில்லை. பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டது. அந்த சம்பவங்களின் குற்றவாளிகள் இன்பராஜை விட மோசமானவர்களாக இருந்தார்கள்!#PSBB https://t.co/cOSvUGWV9Y
— Ramkumar_official (@dir_ramkumar) May 24, 2021