ராயன் உலக அளவில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா.?

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கலிள் ஒருவர் இவர் சமீப காலமாக படத்தை தயாரிப்பதிலும், படத்தை இயக்குவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் இயக்கத்தில் ராயன் திரைப்படம் வெளியாகி உள்ளது.

மேலும் தனுஷ் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹாலிவுட் என கலக்கிக் கொண்டிருக்கிறார், ராயன் திரைப்படம் முதல் நாளில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அமோக வரவேற்பு பெற்றது இந்த நிலையில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்பொழுது தெரியவந்துள்ளது.

உலக அளவில் இந்த திரைப்படம் ஏழு நாளில் நூறு கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது அது மட்டும் இல்லாமல் தனுஷ் கேரியரில் குறைந்த நாட்களில் 100 கோடியை தொட்ட திரைப்படம் என்ற பெருமையை ராயன் திரைப்படம் செய்தது.

தனுஷுக்கு ஐம்பதாவது திரைப்படம் என்பதால் இந்த திரைப்படம் தனுசே இயக்கி தனுஷ் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு 50 வது திரைப்படம் எப்படி மகாராஜா நன்றாக ஓடியது அதேபோல தனுஷுக்கும் ராயன் திரைப்படம் நன்றாக ஓடி உள்ளது.

ராயன் திரைப்படத்தை கொண்டாடும் விதமாக பத்திரிகையாளர்களுக்கு விருந்து வைக்கப்பட்டது அதன் வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது. இந்த நிலையில் ராயன் திரைப்படம் உலக அளவில் 145 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது இன்னும் ஒரு நாட்களில் 150 கோடி வசூல் செய்து சாதனை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.