எந்த கொம்பனாலும் ரெண்டா பிரிக்கவே முடியாது.. சாந்தனு நடித்திருக்கும் ‘இராவண கோட்டம்’ பட டிரைலர்..

இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் ஹீரோவாக நடித்திருக்கும் இராவண கோட்டம் திரைப்படத்தின் ட்ரெய்லர் சற்று முன்பு வெளியாகிய இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சாந்தனு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில் தற்பொழுது இராவணக் கோட்டம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தினை கண்ணன் ரவி தயாரித்திருக்கும் நிலையில் சாந்தனுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். இதுவரையிலும் இல்லாத வேடத்தில் முழுவதும் வித்தியாசமான கதை அம்சத்துடன் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு ஐன்ஸ்டீன் பிரபாகரன் இசையமைத்திருக்கும் நிலையில் லாரன்ஸ் கிஷோர் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு இராவணக் கோட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய நிலையில் மேலும் தற்பொழுது இன்று இராவண கோட்டம் படத்தின் ட்ரெய்லர் சிம்பு தன்னுடைய சமூக வலைதள வாயிலாக வெளியிட்டுள்ளார்.

இந்தப் படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் ஆரம்பத்தில் எந்த கொம்பனாலும் இரண்டாகப் பிரிக்க முடியாது என்ற வாசகனத்துடன் அதிரடியாக உருவாகியுள்ளது. இந்த ட்ரெய்லர் தற்பொழுது வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.