சந்திரமுகி 2 பட நடிகர் திடீர் மரணம்.! இரங்கல் தெரிவிக்கும் சினிமா பிரபலங்கள்.!

CHANDRAMUKHI 2
CHANDRAMUKHI 2

R S Shivaji : தமிழ் சினிமாவில் கமலஹாசனின் நண்பனும் குணச்சத்திர வேடத்தில் நடித்து வரும் ஆர் எஸ் சிவாஜி திடீரெனம் மரணம் அடைந்துள்ளார் இவருக்கு தற்பொழுது வயது 67 இவர் கமலஹாசன் மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சம்பந்தப்பட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கமலுடன் இணைந்து அபூர்வ சகோதரர்கள் என்ற திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சார் நீங்க எங்கேயோ போயிட்டீங்க என்ற வசனம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. மேலும் இவர் நடிப்பில் வெளியாகிய வில்லன், ஆயுத எழுத்து, சூரரை போற்று என பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன. மேலும் சமீபத்தில் வெளியாகிய யோகி பாபுவின் லக்கி மேன் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

அதேபோல் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாக்கியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படி பல திரைப்படங்களில் நடித்துள்ள ஆர் எஸ் சிவாஜி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளது பலருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இவரின் மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் ரசிகர்களும் தற்பொழுது சமூக வலைதளத்தில் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஜெயிலர் திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கோலமாவு கோகிலா திரைப்படத்தில் பணியாற்றிய பொழுது சிவாஜி உடைய நேர்மையையும் அர்ப்பணிப்பையும் நினைவு கூறுகிறேன் எனக்கூறி இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதேபோல் நடிகர் கமலஹாசன் எனது நண்பரும் சிறந்த குணசத்திர நடிகருமான ஆர் எஸ் சிவாஜி மறைந்து செய்தி அறிந்து மிகுந்த வேதனை கொள்கிறேன் சிறிய கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்கள் மனதில் காலம் கடந்து நீடிக்கும்படியான உயிரோட்டத்தை அழிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர் எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் குடும்பத்தினர் ஓர் உறுப்பினராகவே பெரிதும் அறியப்பட்டவர் அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு நண்பர்களுக்கும் என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.