தொகுப்பாளராக இருந்து பின் நாட்களில் படிப்படியாக காமெடி நடிகர் ஹீரோ தற்போது இயக்குனராக மாறி சிறப்பாக வருபவர் ஆர் ஜே பாலாஜி. இந்த திறமைகள் எல்லாம் வெறும் குறைந்த வருடங்களிலேயே செய்து அசத்தி உள்ளார். இது பலருக்கும் நம்ப முடியாததாக இருக்கிறது.
மேலும் வளர்ந்து கொண்டிருக்கும் ஆர்ஜே பாலாஜி அடுத்தடுத்த ஹிட் படங்களை இயக்குவதும், நடிப்பதால் இவருக்கு பெரும் பொருளும் நல்ல வரவேற்ப்பு இருக்கின்றன.
அந்த வகையில் எல்கேஜி திரைப்படம் இவருக்கு மாபெரும் வரவேற்பு கொடுத்தது அதை தக்க வைத்துக் கொண்டு மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தை இயக்கி அதில் நடித்து தன்னை மேலும் பட்டிதொட்டியெங்கும் பிரபலப்படுத்தி கொண்டார் இந்த நிலையில் ஆர் ஜே பாலாஜி ஒரு புதிய படத்தை இயக்கவும், நடிக்கவும் ரெடியாக இருக்கிறார்.
ஹிந்தியில் 2018ம் ஆண்டு வெளியான ஆயுஷ்மான் குரானா நடித்த பதாய் ஹோ என்ற திரைப்படத்தின் ரீமேக் தற்போது போனிகபூர் கைப்பற்றி உள்ளார் அந்த திரைப்படத்தில் ஆர்ஜே பாலாஜி இயக்கி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்போது இருக்கின்ற சூழலில் சரியில்லாததால் கொரோனா தொற்று குறைந்து அல்லது முடிந்த பிறகே படத்தின் சூட்டிங் தொடங்கும் என கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தை ஒரே செட்டில் வைத்து படத்தை முடிக்க ஆர்ஜே பாலாஜி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன மாறி மாறி சூட்டிங் செல்வதால் அங்கு சூழலை சரியில்லாமல் போய் விடுவதால் சூட்டிங் தடைபெறுகிறது அதனை முன்னிட்டு ஒரு இடத்தில் நடத்த திட்டமிட்டுள்ளார்.
இப்படத்திற்கு “வீட்டுல விசேஷங்க” என்ற டைட்டிலை வைக்க பெரிய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.