மணிமேகலையை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு விலகுகிறாரா மற்றொரு பிரபலம்.! குழப்பத்தில் ரசிகர்கள்..

cook-with-komali-2

விஜய் டிவியில் முக்கியமான ரியாலிட்டி ஷோவாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நம்பர் ஒன் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி இந்நிகழ்ச்சி இந்த அளவிற்கு பிரபலமடைவதற்கு முக்கிய காரணம் கோமாளிகள் தான்.

இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சியில் இருந்து முக்கிய கோமாளியான மணிமேகலை விலகிய நிலையில் இவரை அடுத்து மற்றொரு பிரபலம்  தற்பொழுது விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது எனவே அந்த பிரபலம் ரசிகர்களுக்கு நன்றி கூறி பதிவிட்டிருக்கும் நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் சமையல் நிகழ்ச்சியாக தொடங்கிய குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்பொழுது டிஆர்பியில் முன்னணி வகித்து கலக்கி வருகிறது. கோமாளிகள் தொடர்ந்து தங்களுடைய காமெடியை வெளிப்படுத்தி அனைவரையும் மகிழ்ச்சி படுத்தி வந்தனர். அந்த வகையில் புகழ், பாலா, மணிமேகலை, சிவாங்கி, குரேஷி ஆகியோர்கள் கோமாளிகளாக கலக்கி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கு பெற்று வந்த பாலா மற்றும் மணிமேகலை அடுத்தடுத்து விலகிய நிலையில்  ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. எனவே மணிமேகலை எதற்காக விலகினார் என்ற காரணம் தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வரும் நிலையில் இவர்களை எடுத்து தற்போது குரேஷி டுவிட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

cook with komali 1
cook with komali 1

அதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி கொடுத்த அனைத்து நினைவுகளுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் குரேஷியும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு விலகப் போகிறாரா என அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிறகு இந்த பதிவை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே குரேஷி நீக்கிவிட்டு பிறகு உடல் மண்ணுக்கு.. உயிர் குக் வித் கோமாளிக்க என மற்றொரு டுவிட்டை போட்டுள்ளார்.

cook with komali

இவ்வாறு மாறி மாறி ட்விட்டை வெளியிட்டு வருவதால் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வந்த நிலையில் தற்பொழுது காமெடி பண்ணாம சாக மாட்டேன்.. குக் வித் கோமலே விட்டு போக மாட்டேன் என ரைமிங்கான வசனத்துடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொடர்வதை உறுதி செய்துள்ளார்.