பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஐந்து வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வந்தது இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார் இந்த நிலையில் இந்த வருடம் ஆறாவது சீசன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த நிகழ்ச்சியையும் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கமல் தொகுத்து வழங்குவதால் தான் பிக் பாஸ் சீசன் சூடு பிடித்து வருகிறது.
இந்த நிலையில் ஆறாவது சீசன் இந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது பத்து பெண் போட்டியாளர்கள் ஒன்பது ஆண் போட்டியாளர்கள் ஒரு திருநங்கை என 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு பாதி கட்டத்தை தாண்டிவிட்டது அதாவது 50 நாளை கடந்துள்ளது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இன்னும் 14 போட்டியாளர்கள் இருக்கிறார்கள் அதிலும் இந்த வாரம் குயின்ஸி வெளியேறி விட்டால் மீதி 13 பேர் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருப்பார்கள்.
பிக் பாஸ் வீட்டில் குயின்ஸி எந்த ஒரு வேலையும் செய்யாமல் ஜாலியாக சுற்றித்திரிந்து கொண்டிருந்தார் அதனால் தான் இவர் எலிமினேஷன் ஆகியதற்கு முக்கிய காரணம் குயின்ஸி எவிக்ஷன் ஆனதற்கு ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் பிக் பாஸ் ரசிகர்களுக்கு இவர் எலிமினேஷன் ஆனால்தான் நன்றாக இருக்கும் என நினைத்து இருப்பார்கள்.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இதுவரை குயின்ஸி எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பது தற்பொழுது தெரியவந்துள்ளது அந்த வகையில் குயின்ஸி ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது பிக் பாஸ் மூலம். அதேபோல் ஒருவாரத்திற்கு பிக் பாஸ் மூலம் குயின்சிக்கு 1.4 லட்சம் வரை சம்பளமாக பெற்றுள்ளார்.
இந்த நிலையில் இதுவரை அவர் எட்டு வாரம் தங்கி உள்ளார் அதனால் இவர் 11 லட்சத்திற்கு மேல் சம்பளமாக பெற்று இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.