நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர், டான் போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது அடுத்து அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கிறது படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு கதாநாயகி மரியா நடித்து வருகின்றார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சத்யராஜ் நடித்து வருகிறார் . இவர்கள் இருவரும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரின்ஸ் படத்தை வருகின்ற தீபாவளியன்று வெளியிட உள்ளதாக..
அதிகாரபூர்வமான தகவல் வெளிவந்ததை அடுத்து படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகின்றன. இந்தப் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ள நிலையில் அதனை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளது இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஹீரோயினாக சாய்பல்லவி நடிக்க உள்ளார்.
இதற்கான புகைப்படங்கள் கூட சமூக வலைதளங்களில் வெளியாகியது. பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த பிறகு சிவகார்த்திகேயன் SK 21திரைப்படம் தொடங்கும் என தெரிய வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார் என்ற தகவல் இணையதளத்தில் உலா வந்தது.
ஆனால் தற்போது வந்த தகவலின் படி சிவகார்த்திகேயனின் பேவரட் இசை அமைப்பாளர் அனிருத் தான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் என கூறப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயன் இசையில் வெளிவந்த டாக்டர் டான் போன்ற இரு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து வசூலை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.