தமிழ் சினிமாவிற்கு வித்தியாசமான கதைக்களத்தை கொடுத்து வருபவர் இயக்குனரும் நடிகருமான செல்வராகவன். இவர் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெறுவது மட்டுமல்லாமல் தனது திரைப்படத்திற்கு மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.
செல்வராகவன் ஆரம்பகாலத்தில் எழுத்தாளராக தான் இருந்து வந்தார். அதன் பிறகு தனுஷை வைத்து துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் கதை ஆசிரியராக பணியாற்றினார். அந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததால் அதனைத் தொடர்ந்து தனுஷை வைத்து 2003 ஆம் ஆண்டு காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தை இயக்கினார். தனுஷ் செல்வராகவன் இணைந்து பணியாற்றிய இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது.
மேலும் இயக்குனர் என்ற அந்தஸ்தையும் செல்வராகவன் அடைந்தார் அதேபோல்தான் தனுஷ் அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் செல்வராகவன் இயக்கத்தில் 7ஜி ரெயன்போ காலனி, புதுப்பேட்டை ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன என பல திரைப் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றன. அதிலும் தனுஷை வைத்து செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெறவில்லை என்றாலும் இந்த திரைப்படத்தை பற்றி பலரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
காதல் கொண்டேன் திரைப்படத்திற்குப் பிறகு தனுஷ், சோனியா அகர்வாலை வைத்த டாக்டர் என்ற திரைப்படத்தை இயக்க இருந்தார் ஆனால் அந்த திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. புதுப்பேட்டை திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 வருடங்கள் ஆகிவிட்டது அதனால் ட்விட்டரில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இன்றளவும் செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் பல திரைப்படங்கள் வந்தாலும் புதுப்பேட்டை திரைப்படத்திற்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.
இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சோனியா அகர்வால் மற்றும் சினேகா நடித்திருந்தார் இந்த சினேகாவின் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் வேறொரு நடிகை என தற்போது தெரியவந்துள்ளது. நடன இயக்குனரும் நடிகையும் மன காயத்ரி ரகுராம் தான் சினேகா கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது. இது குறித்து பேட்டி ஒன்றில் அவர் பேசினார்.
அந்த பெட்டியில் காயத்ரி தன்னுடைய 16 வயதில் இருக்கும் பொழுது சார்லி சாப்ளின் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் அதன் பின்னர் புதுப்பேட்டை திரைப்படத்தில் சினேகா கதாபாத்திரத்தில் கமிட்டானார் ஆனால் படத்தை எடுக்க ஆறு மாத காலம் ஆகும் என செல்வராகவன் கூறி விட்டதால் அந்த திரைப்படத்தில் இருந்து காயத்ரி ரகுராம் விலகி விட்டாராம். அதனால் சினேகா கதாபாத்திரத்தில் காயத்ரி ரகுராமால் நடிக்க முடியாமல் போனது.