இந்திய அணியின் கேப்டன்னாக இவரை போடுங்கள்.! ரோஹித், ராகுல், பண்ட் ஆகியவர்கள் தேவையில்லை – நெஹ்ரா அதிரடி பேச்சு.

cricketers
cricketers

இந்திய அணியில் தற்போது அதிரடி மாற்றங்கள் அடுத்தடுத்து நடக்க இருக்கின்றன. முதலில் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி காலம் நிறைய இருப்பதால் இவருக்கு அடுத்ததாக ராகுல் டிராவிட்டை BCCI   நியமித்துள்ளது. ராகுல் டிராவிட் தற்பொழுது 20 ஓவர் உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் இந்திய அணியின் கோச்சாக அவர் மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

அதேபோல் தற்போது விராட் கோலியும் இந்த தொடரின் முடித்த பிறகு கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது இதனை அடுத்து அவரது இடத்தை பிடித்த கேப்டனாக செயல்படுவார் என்பதே பலரின் கேள்வி குறியாக இருந்து வந்த நிலையில் முதன்மையாக ரோகித் ஷர்மா தான் அடுத்த கேப்டன்னாக மாற அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஒரு பக்கம் தெரிவிக்கப்படுகிறது.

காரணமாக IPL மற்றும் இந்திய அணிக்காக அவர் சிறந்த கேப்டன்ஷிப் செய்து வெற்றிகளை குவித்து உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு போட்டியின் போது எந்த வீரரை எந்த நேரத்தில் களமிறக்குவது மற்றும் பந்து வீச்சாளர், பில்டிங் போன்ற அனைத்தையும் சரியாக செய்ததால் ரோஹித் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் இவரை தொடர்ந்து ரிஷப் பண்ட் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் கேப்டனாக இருந்தால் கூட ஓகே என இந்திய அணி எதிர்பார்க்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் ரோகித், பண்ட், கேஎல் ராகுல், ஆகிய மூவருமே வேண்டாம் இவரை போடுங்கள் என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான நெஹ்ரா ஒரு வீரரை குறிப்பிட்டுப் பேசி உள்ளார் அந்த வீரர் வேறு யாருமல்ல இந்திய அணியின் அதிவேக பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவை தான் சொல்லியுள்ளார்.

இவரை கேப்டனாக போட்டால் சிறப்பாக இருக்கும் என அவர் பேசியுள்ளார் சமீப காலமாக இந்திய அணிக்கு பல போட்டிகளில் சிறப்பாக பணியாற்றி வருகிறார் அவருக்கு நல்ல அனுபவம் இருக்கிறது ஏன் வேகப்பந்துவீச்சாளர் கேப்டன் பொறுப்பு எடுத்துக் கொள்ளக் கூடாது அப்படி ஏதாவது வீதி முறை இருக்கிறதா பின் அவரை போடுங்கள் அவருக்கு நல்ல அனுபவம் இருக்கிறது அணியை நல்லதொரு இடத்திற்கு எடுத்துச் சொல்வார் என கூறி உள்ளார்.