ரிலீஸ் ஆவதற்கு முன்பே சரியான விலைக்கு போன புஷ்பா திரைப்படம்..! அதுக்குள்ள இத்தனை கோடியா..?

pushpa

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன் இவர் சமீபத்தில் புஷ்பா என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் மிகவும் அதிகரித்துவிட்டது.

அந்தவகையில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் போன்றவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல்  சமீபத்தில் அந்த திரைப்படம் பாடல் ஒன்று நடிகை சமந்தா நடனம் ஆடி உள்ளது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மேலும் அந்த பாடலானது சமூக வலைதள பக்கத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் பல்வேறு விமர்சனங்களையும் கருத்தையும் உருவாக்கி விட்டது அந்த வகையில் இந்த பாடலில் ஆண்களை இழிவுபடுத்திப் பேசிய தாக ஒரு சமூகத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

pushpa
pushpa

இது ஒரு பக்கம் இருக்க ஒரு சில ரசிகர்கள் நடிகை சமந்தாவும் அந்த பாடலையும் மிக ஆழ்ந்து ரசிப்பது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற 17 ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா பகத் பாசில் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே சாட்டிலைட் டிஜிட்டல் மற்றும் ஆடியோ ஆகிய அனைத்து உரிமைகளும் சுமார் 250 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக  தகவல்கள் வெளிவந்துள்ளது. அதே போல மற்ற மொழிகளில் டிஜிட்டல்  ஸ்ட்ரீமிங் ஓடிடி கைப்பற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.