இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகளையே மிரட்டி வருகிறது கரோனா அதேபோல் தமிழ்நாட்டிலும் கொரோனா தலை விரித்து ஆடுகிறது. இந்த கொரோனா காலகட்டத்திலும் ஒரு சில திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றி பெற்று வருகிறது. பொதுவாக சமீபகாலமாக புதிய திரைப்படம் வெளியாகிறது அதேபோல் அதனை தமிழிலும் மொழி பெயர்ந்து ஒரே நேரத்தில் வெளியிடுகிறார்கள்.
அந்த வகையில் புஷ்பா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இந்த திரைப்படம் சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம்,ஹிந்தி என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுனனின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. அதேபோல் இந்த திரைப்படம் கோடிகளில் வசூலை வாரி குவித்தது.
புஷ்பா திரைப்படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். படத்தில் அல்லு அர்ஜுன் அவர்களுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில், அனுசியா என பலர் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார் இந்த திரைப்படத்தில் செம்மரம் கடத்தலை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டிருக்கும்.
ஐந்து மொழிகளில் உருவான இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த நிலையில் பலரும் இரண்டாம் பாகத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்களும் பெரும் சர்ச்சையை சந்தித்தது. சமந்தா நடனமாடிய ஓ சொல்றியா மாமா ஓ ஓ சொல்றியா என்ற பாடல் இளசுகள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்து பாட்டை நீக்க வேண்டும் என படக்குழுவினர் மீது புகார் அளித்தார்கள்.
இதனால் பெரும் சர்ச்சை எழுந்தது. அதேபோல் ராஷ்மிகா மந்தனா நடனமாடிய வாயா சாமி என்ற பாடல் ரசிகர்களிடம் வைரல் ஆனது ஆனாலும் இந்த பாடலில் ராஷ்மிகா மந்தனா படு கிளாமராக நடனம் ஆடி இருந்தார் என பலரும் விமர்சனம் செய்தார்கள் இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தற்பொழுது புஷ்பா படத்திற்கு மேலும் ஒரு பிரச்சனை எழுந்துள்ளது.
புஷ்பா திரைப்படத்தின் இறுதியில் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா வின் பெயரை ராஷ்மிகா மடோனா என பதிவிட்டு இருக்கிறார்கள் படக்குழு, இதனைப் பார்த்த ரசிகர் ஒருவர் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு 200 கோடி பட்ஜெட் இரண்டு வருட உழைப்பில் உருவாக்கிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தின் பெயரையே மாற்றி விட்டார்களே என கமெண்ட் செய்துள்ளார்.