“புஷ்பா” படம் தமிழகத்தில் மட்டும் மூன்று நாட்களில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.? தலை சுற்றி விழும் தமிழ். ரசிகர்கள்

puspa
puspa

ஒரு படம் சிறப்பாக இருந்தால் போதும் அந்த திரைப்படம் அந்த மொழியையும் தாண்டி மற்ற மொழிகளிலும் நல்ல விமர்சனத்தை பெறுவதோடு வசூல் வேட்டையை நடத்தும் அந்த வகையில் சமீபகாலமாக தெலுங்கு படங்கள் தமிழ்நாடு பக்கம் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றது அசத்துகின்றன.

அண்மையில் கூட ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி மற்றும்  பாகுபலி 2  ஆகிய படங்கள் வசூல் அடித்து நொறுக்கிய நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவில் பிரமாண்ட பட்ஜெட்டில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியானது.

தற்போது இந்தியா முழுவதும் புஷ்பா திரைப்படம் நல்ல வரவேற்ப்பையும், வசூல் வேட்டை கண்டு வருகிறது. புஷ்பா படம் முழுக்க முழுக்க செம்மரக் கட்டையை மையமாக வைத்து வெளியாகி இருப்பதால் வித்யாசமான கதைக் களமாக இருந்தது அதன் காரணமாக அனைத்து தரப்பட்ட மக்களையும் கவர்ந்து இழுத்துள்ளது.

மேலும் இதில் அல்லு அர்ஜுன் தனது  மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி கதைக்கு ஏற்றவாறு நடித்திருந்தார் அதனால் இந்த படத்தை பார்க்க அனைவரும் ஆசைப்படுகின்றனர். அதனால் தற்போது வசூலும் சக்கை போடு போட்டு வருகிறது இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் கைகோர்த்த ராஷ்மிகா மந்தனா, சமந்தா, பகத் பாசில் போன்ற டாப் நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

முதல் நாள் மட்டுமே இந்த திரைப்படம் இந்திய அளவில் 71 கோடியை அள்ளியது தமிழகத்தின் முதல் நாள் 4கோடி இரண்டாவது நாள் 3.10 கோடியை அள்ளிய நிலையில் கடந்த 3 நாட்களில் மட்டும் புஷ்பா படம் 12 கோடி அள்ளியதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமே மூன்று நாட்களில் இவ்வளவு கோடி அள்ளியது மிகப்பெரிய  விஷயம் எனக் கூறி வருகின்றனர்.