“புஷ்பா” பட புஷ்பராஜ் போல் மாறிய சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா.! இணையதளத்தில் கலக்கும் புகைப்படம்.

puspa-

அல்லு அர்ஜுன் நடிப்பில் அண்மையில் வெளிவந்து வெற்றிநடை கொண்டுவரும் திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் கைகோர்த்த ராஷ்மிகா மந்தனா, சமந்தா, பகத் பாசில் போன்ற டாப் நட்சத்திர  பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர்.

இந்த படம் முழுக்க முழுக்க கிராமத்து அதேசமயம் காடு மலைகளைச் சார்ந்த செம்மரக் கடத்தலை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது படம் வித்தியாசமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இதில் ஒவ்வொருவருக்கும்  கதையின்படி  வித்தியாசமான கெட்டப்பில் நடித்து அசத்தி இருந்தார்கள்.

படம் சற்று புதுவிதமாக இருந்ததால்  அனைவரையும் கவர்ந்திழுத்து வருகிறது.  அதிலும் குறிப்பாக அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா கதாபாத்திரம் வேற லெவல் அவரது ஸ்டைல் தற்போது பலரையும் கவர்ந்துள்ளது இந்த நிலையில் இந்திய அணியின்  கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜாவையே வெகுவாக கவர்ந்துள்ளதாம். இந்திய அணியில் ஆல் ரவுண்டர் இருந்து வரும் ரவீந்திர ஜடேஜா.

சமீபகாலமாக செம ஃபார்மில் இருக்கிறாராம் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் தேவைக்கு ஏற்ப தனது திறமையை வெளிக்காட்டி வசதி வருவதால் இந்திய அணியில்   தவிர்க்க முடியாத ஒருவராக உள்ளார். தற்போது சில காயங்கள் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து சவுத்ஆப்பிரிக்கா எதிரான போட்டியில் விளையாட இருந்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில்  புஷ்பா படத்தை பார்த்து பார்த்துள்ளாரோ என்னவோ அல்லு அர்ஜுன் போல இவரும் தனது கெட்டப்பை மாற்றி  இவரும் வாயில் பீடியை வைத்துக்கொண்டு செம ஸ்டைலாக எடுத்துக்கொண்ட புகைப்படம். இணையதள பக்கத்தில் கலக்கி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் அல்லு அர்ஜுன்னுக்கு டஃப் கேட்டிருப்பீர்கள்  எனக் கூறி  லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர். இதோ அந்த அழகிய புகைப் படத்தை நீங்களே பாருங்கள்..

jadeja
jadeja