“ஜவான்” படத்தில் புஷ்பா ஹீரோ.. அவருக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா.?

jawan
jawan

தோல்வியை சந்திக்காத இயக்குனர்களில் ஒருவர் அட்லீ.. இவர் கடைசியாக தளபதி விஜயை வைத்து “பிகில்” என்னும் மாபெரும் பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்தார் அதனை தொடர்ந்து தமிழில் டாப் நடிகர்களை வைத்து படம் பண்ணுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கு..

ஒரு மாஸ் கதையை சொல்லி சம்மதம் வாங்கினார். சிறு இடைவேளைக்குப் பிறகு “ஜவான்” என்ற பெயரில் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படம் முழுக்க முழுக்க ராணுவ சம்பந்தப்பட்ட ஒரு கதையாக உருவாகி வருகிறது இதனால் ஜவான் படத்தில் ஆக்சனுக்கு பஞ்சம் இருக்காது என சொல்லப்படுகிறது அதற்கு ஏற்றார் போல..

படத்தில் ஷாருக்கானுடன் கைகோர்த்து சானியா மல்கோத்ரா, யோகி பாபு, விஜய் சேதுபதி, நயன்தாரா, ப்ரியாமணி.. போன்றவர்கள் இணைந்து படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகின்றனர். ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு இணையாக நயன்தாரா கதாபாத்திரம் இருக்கும் எனவும், ஆக்ஸனில் இவர் பிச்சி உதறி வருகிறார்.

எனவும் சொல்லப்படுகிறது.  இப்படி இருக்கின்ற நிலையில் படத்தின் ஒரு மாஸ் கேரக்டர் இருக்கிறது. அதுவும் ஷாருக்கான், விஜய் சேதுபதிக்கு இணையான ஒரு கதாபாத்திரம் என்பதால் அதில் ஒரு மாஸ் ஹீரோவை நடிக்க வைக்க அட்லீ முடிவு செய்தார் ஒரு வழியாக புஷ்பா பட ஹீரோ அல்லு அர்ஜுனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

அட்லீ, அல்லு அர்ஜுனை தேர்வு செய்ய முக்கிய காரணம் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான புஷ்பா திரைப்படம் இந்தியா முழுவதும் சக்க போடு போட்டது மேலும் இந்திய முழுவதும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அல்லு அர்ஜுனை பெரிய அளவில் பயன்படுத்திக்கொள்ள தற்பொழுது அட்லீ முடிவு செய்து இருக்கிறார்.