படம் வெளிவருவதற்கு முன்பாகவே கோடிக்கணக்கில் காசு பார்த்த புஷ்பா – அதிர்ச்சியில் தெலுங்கு சினிமா.?

puspa
puspa

சமீபகாலமாக பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் உருவாக்கப்பட்டு வருகின்றன அந்த படங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பை எகிற வைக்கின்றன அந்த வகையில் ராஜமௌலி, ஷங்கரை தொடர்ந்து சுகுமார் மிக பிரமாண்ட பொருட்செலவில் இயக்கி உள்ள திரைப்படம் புஷ்பா.

இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாகவும், ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாகவும் நடித்து வந்துள்ளனர். மேலும் பல்வேறு டாப் நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர் அந்த வகையில் மலையாள நடிகர் பகத் பாசில் புஷ்பா படத்தில் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படம் முழுக்க முழுக்க செம்மர கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது இதில் வித்தியாசமான நடிப்பை அல்லு அர்ஜுன் வெளிப்படுத்தியுள்ளார். அதை டிரெய்லரில் பார்க்க முடிந்தது இந்த படம் வருகிற 17-ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது.

இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலிக்க ஐந்து மொழிகளில் வெளியாகிறது. தெலுங்கை தாண்டி தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் படம் வெளிவருவதற்கு முன்பாகவே பல கோடிகளை அள்ளிய செம மாஸ் காட்டி வருகிறது.

புஷ்பா படம் அனைத்து மொழிகளிலும் OTT, சேட்டிலைட் மற்றும் ஆடியோ என அனைத்தும்  சுமார் 250 கோடிக்கு விற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் படக்குழு மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர் சந்தோஷத்தில் இருக்கின்றனராம்.