தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். தொடர்ந்து ஆக்சன் மற்றும் காதல் திரை படங்களில் நடித்து வெற்றியை ருசித்தாலும் அவருக்கு என்னவோ பருத்திவீரன் போல ஒரு கிராமத்துக்கு கதையில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்துள்ளது அதை பல்வேறு இளம் இயக்குனர்களுடனும் வெளிப்படையாக கூறியுள்ளார்.
இந்த நேரத்தில்தான் இயக்குனர் சுகுமார் புஷ்பா படத்தின் கதையை சொல்ல அல்லு அர்ஜுனுக்கு ரொம்ப பிடித்து போகவே உடனடியாக அது படமாக எடுக்கப்பட்டது பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது படம் வித்தியாசமாக இருந்தது.
மேலும் அல்லு அர்ஜுன் ராஸ்மிகா மந்தனா போன்றவர்கள் சூப்பராக நடித்தது. படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக நின்றது தெலுங்கு சினிமாவையும் தாண்டி இந்திய அளவில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் வேட்டை நடத்தியது குறிப்பாக 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது. முதல் பாகத்தை தொடர்ந்த இரண்டாவது பாகம் தற்பொழுது அதிரடியாக உருவாகி வருகிறது.
காடு மலை கிராம பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. புஷ்பா 2 படத்திலும் ஆக்ஷன் சென்டிமென்ட் போன்றவைக்கு பஞ்சம் இருக்காது என தெரிய வருகிறது. புஷ்பா 2 திரைப்படத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாஸில், ராஷ்மிகா மந்தனா, ஜெகதீஷ், பிரதாப் பந்தாரி, சுனில் ராவ், ரமேஷ் போன்றவர்கள் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் தற்பொழுது ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது புஷ்பா 2 படத்தோடு படம் முடிவதில்லை புஷ்பா 3 யும் எடுக்கப்பட இருக்கிறதாம். இதனை பகத் பாஸில் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. புஷ்பா அடுத்த அடுத்த பாகங்களாக வெளியாக உள்ளதால் ரசிகர்கள் தற்போது செம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.
#Pushpa3 CONFIRMED by Fahadh Faasil.#AlluArjun
— Manobala Vijayabalan (@ManobalaV) July 19, 2022