Pushpa 2 Business: சினிமாவில் வெற்றி திரைப்படங்களை தந்து வரும் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் தற்பொழுது புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் மாபெரும் வெற்றியினை பெற்று வரும் நிலையில் அப்படி ஒட்டுமொத்த திரையுலகினர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த படம் தான் புஷ்பா.
புஷ்பா படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பினை பெற்றது இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் பகத் பாஸில் வில்லனாக மிரட்டு இருந்தார். இந்த வெற்றி படத்தினை இயக்குனர் சுகுமார் இயக்கியினார் என்பது குறிப்பிடத்தக்கது.
புஷ்பா படம் எந்த அளவிற்கு வெற்றினை பெற்றதோ அதேபோல பாடல்களும் நல்ல ரீச்சை பெற்றது. புஷ்பா படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இவ்வாறு புஷ்பா படத்தின் வெற்றி தொடர்ந்து இரண்டாவது படத்தின் ஷூட்டிங் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் புஷ்பா 2 படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் கலைக்கட்டிய நிலையில் இதனை அடுத்து தற்பொழுது புஷ்பா 2 படத்தின் பிரீ பிசினஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. புஷ்பா 2 படம் ரூபாய் 450 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் நிலையில் எந்த படத்தின் மொத்த உரிமையையும் வடமாநில நிறுவனம் ஒன்று ரூபாய் 1000 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை. இவ்வாறு ரிலீசுக்கு முன்பே புஷ்பா 2 படம் 1000 கோடி பிசினஸ் செய்திருப்பது ஆச்சரிய கூடிய ஒன்றாக அமைந்திருக்கிறது. எனவே இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.