புஷ்பா 2 தீ ரூல் : திரையரங்கில் மிரட்டியதா இதோ திரை விமர்சனம் .

pushpa 2 review
pushpa 2 review

ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜுன் ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் புஷ்பா 2. தி ரூல் இன்று வெளியாகி உள்ள இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை காணலாம்.

செம்மர கடத்தலில் கைதேர்ந்த மிகப்பெரிய கையாக இருக்கும் அல்லு அர்ஜுன் தங்களுடைய வியாபாரத்தை விரிவடைய செய்கிறார். அதுமட்டுமில்லாமல் முதல் பாகத்தில் அவமானப் படுத்தப்பட்ட பன்வார் சிங்க் தம்பியின் மரணத்திற்கு பழித்திருக்க நினைக்கும் தாக்ஷயணி ஆகியோரை புஷ்பா எப்படி சமாளிக்கிறார் என்ற கேள்விக்கு இந்த திரைப்படம் விடை கொடுத்துள்ளது.

முதலமைச்சர் தன்னை அவமானப்படுத்தியதால் அவரை எப்படி படைத்திருக்க வேண்டும் என்று புஷ்பா பல முயற்சிகளை செய்வதுதான் படத்தின் கதை.

பான் இந்திய திரைப்படமாக இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சுமார் 800 திரையரங்குகளில் வெளியிட்டுள்ளது. புஷ்பாவாக அல்லு அர்ஜுன் ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார். பல காட்சிகளில் படத்தை தன்னுடைய தோளில் சுமக்கும் அவர் சண்டைக் காட்சிகள் ரொமான்ஸ் காட்சிகள் நடன காட்சிகள் என அதகளம் பண்ணி உள்ளார்.

அதேபோல் பகத் வாசலுக்கான அறிமுக காட்சிகள் யாரும் எர்பார்க்காத வகையில் மரட்டலாக இருந்தது அது மட்டும் இல்லாமல் ராஷ்மிகா மந்தானா படம் முழுவதும் ஸ்கோர் செய்கிறார் அல்லு அர்ஜுன் அவர்களுக்காக ஒரு நீண்ட வசனம் பேசி ரசிகர் மத்தியில் நிலையாக நிற்கிறார்.

அது மட்டும் இல்லாமல் நடனம் ரொமான்ஸ் என ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார் 3 மணி நேரம் 20 நிமிடம் படம் ஓடினாலும் ஒரு இடத்தில் கூட தோய்வில்லாமல் பக்கவாக திரைக்கதை அமைத்துள்ளார் சுகுமார். படம் முழுக்க மேற்கொக்க காட்சிகள் இருந்தாலும் செண்டிமெண்ட் காட்சிகள் தான் மனதை வருடும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.

படத்தில் பிரம்மாண்ட காட்சிகள் இருந்தாலும் லாஜிக் மீறல்கள் இருந்தாலும் கதை வேகமாக நகர்வதால் அதை பெரிதாக கண்டு கொள்ள முடியவில்லை.