சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாஸில், ஸ்ரீ லீலா ராவ் ரமேஷ், சுனில், அனுசியா என பல நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
அதேபோல் இன்று ஒன்பது மணிக்கு ஹைதராபாத்தில் புஷ்பா 2 திரைப்படத்தில் பிரீமியர் காட்சி வெளியாகும் என அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு போகப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது புஷ்பா 2 திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் இன்று நள்ளிரவில் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி இருக்கும் நிலையில் முதல் விமர்சனத்தை தற்பொழுது வெளியிட்டுள்ளார்கள் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 திரைப்படத்தை பார்த்து விட்டதாகவும் எப்படி இருக்கு அல்லு அர்ஜுன் நடிப்பு எப்படி இருக்கு என்று என்ற விவரத்தை தற்பொழுது தெரிந்து கொள்ளலாம்.
புஷ்பா 2 முதல் விமர்சனம் அல்லு அர்ஜுன், பகத் பாஸில், ராஷ்மிகா மந்தனா, தேவி ஸ்ரீ பிரசாந்த், சாம் சி எஸ் இசையில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் புஷ்பா 2 திரைப்படம் 3 மணி நேரத்திற்கு மேல் ஓடினாலும் ஒரு சீன் கூட தோய்வு அளிக்காமல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது படம் முழுவதும் தீயாக இருப்பதாகவும் உமைர் சந்து தன்னுடைய x பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் இதுவரை எந்த ஒரு நடிகரும் தேசிய விருதை தட்டிச் செல்லவில்லை ஆனால் முதன்முறையாக அல்லு அர்ஜுன் புஷ்பா திரைப்படத்தின் மூலம் தேசிய விருதை தட்டி தூக்கினார் அதேபோல் அவருக்கு இரண்டாவது தேசிய விருது இந்த திரைப்படத்தின் மூலம் நிச்சயம் கிடைக்கும் என கூறியுள்ளார் அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் இறங்கி நடித்து மிரள வைத்துள்ளார் அல்லு அர்ஜுன் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
புஷ்பா 2 திரைப்படத்தின் ஹிந்தி சென்சாரின் பொழுது படத்தை பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார் மேலும் புஷ்பா 2 திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் எனவும் கூறியுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் நம்ம ஊர் பயில்வான் ரங்கநாதன் போல இவரும் படம் பார்க்காமலேயே விமர்சனங்களை கூறி வருவதாக நடிகர் நடிகைகள் பற்றிய அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வருவதாகவும் நெட்டிசன் முதல் விமர்சனத்தை பார்த்து ட்ரோல் செய்து வருகிறார்கள்.
புஷ்பா 2 300 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை ப்ரீ புக்கிங் இல்லையே 150 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் இதுவரை இந்திய சினிமாவில் எந்த ஒரு திரைப்படமும் நிகழ்த்தாத பிரமாண்ட சாதனையாக முதல் நாள் முன்னூறு கோடி வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதிகபட்சமாக 275 கோடி ரூபாய் வரை முதல் நாள் வசூல் இருக்கும் என கருத்துக்கணிப்புகளும் வெளியாகி உள்ளன.