சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவந்த திரைப்படம் புஷ்பா. மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறந்து விளங்கியது. இந்த படம் செம்மரக்கடத்தல் போன்றவற்றை மையமாக வைத்து உருவானது.
இந்த திரைப்படத்தில் படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஹீரோயினாக தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையான ராஷ்மிகா மந்தனா நடித்து அசத்தி இருந்தார். மேலும் இந்த படத்தில் மற்றொரு பிரபல நடிகையான சமந்தா ஓ சொல்றியா மாமா என்ற ஒரு பாடலுக்கு குட்டியோண்டு டிரஸை போட்டுக்கொண்டு நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புஷ்பா படம் வெற்றியடைய சமந்தாவின் நடனமும் உறுதுணையாக இருந்தது. மேலும் இந்த ஒரு பாடலுக்கு நடனமாடியதற்கு மட்டும் சமந்தா அதிகளவு சம்பளம் வாங்கி உள்ளார். இந்த பாடலின் மூலம் பெரிதும் பிரபலமடைந்த சமந்தா அவர் அடுத்தடுத்து நடிக்க உள்ள படங்களிலும் தனது சம்பளத்தை அதிகரித்து உள்ளார்.
எனவும் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமும் எடுக்கப்பட உள்ளது அதிலும் சமந்தா நடனமாடுவார் என பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா நடனம் ஆட மாட்டார் என தகவல் வெளிவந்துள்ளன. இவருக்கு பதில் பாலிவுட் நடிகை திஷா பட்டாணி ஒரு குத்தாட்ட பாடலுக்கு நடனம் ஆடுவார் என்று கூறப்பட்டுள்ளது.
புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் சமந்தா நடனம் ஆடவில்லை என்றாலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சமந்தாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது இது குறித்து கூடிய விரைவில் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.